Tuesday, June 14, 2005

புகையும்.. கொழுப்பும்... மூப்பும்..!



புகைப்பிடித்தலும் அதிக உடல் நிறையும் மனிதர்களில் மூப்பைத் துரிதப்படுத்துவதாக பிரித்தானிய, அமெரிக்க உயிரியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்...!

புகைப்பிடிப்பதன் மூலம் மூப்புக்குக் காரணமான உடல் நிறமூர்த்தத்தில் உள்ள டி என் ஏ பகுதியின் தொழிற்பாடு சராசரியாக 4.6 வருடங்களால் விரைவுபடுத்தப்படுவதாகவும் அதிக உடற்பருமன் 9 வருடங்களால் அதே தொழிற்பாட்டை விரைவுபடுத்துவதாகவும் ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்..!

புகைப்பிடித்தலானது இதயம் மற்றும் நுரையீரலை மட்டுமன்றி முழு உடலுக்குமான மூப்படைதலை அதிகரிக்கச் செய்யும் வகையில் நிறமூர்த்தக் காலக் கடிகாரம் (Chromosomal clock ) தூண்டப்படுவதாக விஞ்ஞானிகள் அறியத்தந்துள்ளதுடன்..புகையிலை கொண்டுள்ள நச்சுப் பொருட்கள் உடலை ஆக்கியுள்ள அடிப்படை அலகான கலத்தின் மிகவும் அடிப்படைச் செயற்பாடுகளைப் பாதிப்படையச் செய்வதன் மூலமும் அதிக நிறைக்குக் காரணமான கொழுப்பு உடல் இரசாயன மாற்றத்துக்கு வழி வகுப்பதன் மூலமும் மூப்படைதல் துரிதப்படுத்தப்படுவதாக மேலும் அறியத்தருகின்றனர்...!

இன்றைய அவசர உலகில் தேவையான உடற்பயிற்சி இன்மையும் ஒழுங்கான உணவுப்பழக்கம் இன்மையும் சமூகச் சீரழிவுப் பழக்கங்களில் ஒன்றான புகைப்பிடித்தல் ஊக்கிவிக்கப்படுதலுமே இவ்வாறான வழமைக்கு மாறான மூப்புக்குக் காரணமாக அமைகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது..!

Smoking and obesity 'age people'

Being overweight and a smoker makes a person biologically older than slim non-smokers of the same birth age, UK and US researchers have found.

Smoking accelerated the ageing of key pieces of a person's DNA by about 4.6 years. For obesity it was nine years.

These genetic codes are important for regulating cell division and have been linked to age-related diseases.


bbc.com

மேலதிக தகவல் இங்கு...!

பதிந்தது <-குருவிகள்-> at 11:52 pm

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

தகவலுக்கு நன்றி குருவிகள்

Wed Jun 15, 01:13:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க