Friday, June 24, 2005

சிகரெட் கொள்ளி..!



சின்னஞ் சிறு கொள்ளிக்கட்டை போன்ற சிகரெட்டை அணைக்காமல் எறிவது கொஞ்சமும் சரியல்ல. சிகரெட் நுனியில் கனன்று கொண்டிருக்கும் தீயின் உஷ்ணம் 800 முதல் 1,200 டிகிரி பாரன்ஹீட் (F) இருக்கிறது. தீப்பிடித்துக் கொள்ள காகிதத்துக்கு 45 டிகிரியும் மரத்துக்கு 47 டிகிரியும் போதும் என்பதை இங்கே நீங்கள் கவனிக்கவேண்டும்.'படுக்கையில் சிகரெட் குடிக்காதே என்று அமெரிக்காவில் ஓயாமல் எச்சரிக்கிறார்கள். அப்படியிருந்தும், அதை இலட்சியம் செய்யாமல், படுக்கையில் சிகரெட் குடித்து அப்படியே தூக்கத்தில் ஆழ்நததால், 2,500 அமெரிக்கர் அண்மையில் தங்களுக்கே கொள்ளி வைத்துக் கொண்டு மாண்டார்கள. அவர்களில் பலர் தாங்கள் படுத்த கட்டடங்களையும் சாம்பலாக்கி விட்டுப் போய்விட்டார்கள்.

மருத்துவமனைகள், அறைகளை வாடகைக்கு விடும் வீடுகள், ஓட்டல்கள் இப்படிப் பல இடங்களில் சிகரெட் கொள்ளியால் பல தீ விபத்துக்கள் நேர்ந் திருக்கின்றன ஆகவே, சிகரெட் பிடிப்பவர் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

1 சிகரெட் குடித்த மிச்சத்தைக் கையால் தேய்த்தோ, காலால் அழுத்தியோ அணைத்துவிட்டே எறியுங்கள்.

2 சிகரெட் நுனி எரிந்து கொண்டிருக்கும்போது தானாகவே அது உள்ளே விழுந்துவிடக் கூடியபடியோ, அணைந்துவிடக் கூடியபடியோ அமைந்த 'சாம்பல் தட்டில" தவிர வேறு எங்கும் அதை வைக்காதீர்கள்.

3 'புகை பிடிக்காதே" என்ற எச்சரிக்கை போட்டிருக்கும் இடங்களில் குடிக்காதீர்கள்.

4 சன்னல் அல்லது மோட்டார் காரிலிருந்து சிகரெட் கொள்ளியை எறியாதீர்கள்.

5 தாழிட்ட அறைகளுக்குள் சிகரெட் பிடிக்காதீர்கள்.

6 கர்ப்பூர தைலம், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களின் அருகே சிகரெட் பிடிக்காதீர்கள்.

7 படுக்கையில் அதுவும் தனியே இருக்கும்போது ஒருபோதும் சிகரெட் பிடிக்காதீர்கள்.

நன்றி - http://sooriyan.com

பதிந்தது <-குருவிகள்-> at 12:00 pm

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

Nanri Kuruvi.

Fri Jun 24, 04:38:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க