Monday, July 04, 2005

வால்நட்சத்திரத்தின் மீதொரு மோதல்..!



மனிதன் மேற்கொண்ட விண்ணியல் மொத்துகையின் பின்னர் வால்நட்சத்திரத்தின் திண்மப் பகுதியில் இருந்து பனித்துகள்களும் தூசி மீதிகளும் வெளித்தள்ளப்படும் காட்சி...!

முன்னர் அறிவித்தது போல யூலை 4 ம் திகதிக்கு அண்மித்து.... நாசா அனுப்பிய விண்ணில் ஆள ஊடுருவி மோத விட்டு ஆய்வு செய்யும் விண்கலத்தின் மொத்துகைத் திணிவு (impactor), பூமிக்கு அப்பால் 133 மில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள Tempel 1 எனும் வால் நட்சத்திரத்தின் திண்மத் திணிவுப் பகுதியில், கிட்டத்தட்ட 37,000km/h எனும் சார்பு வேகத்தில் மோதி, வால்நட்சத்திரத்தின் திண்மம் பகுதியில் இருந்து பெருமளவு பனித்துகள்களையும் தூசி மீதிகளையும் கொண்ட கலவையை விண்ணில் வெளித்தள்ளி உள்ளதாக, இம்மொத்துகையை அவதானித்து வரும் ஆள ஊடுருவி ஆய்வு செய்யும் தாய் விண்கலம் அனுப்பிய படங்கள் உறுதி செய்வதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்...!

இந்த மொத்துக்கையின் விளைவுகளையும் மீதிகளையும் ஆய்வு செய்வதன் மூலம் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாகக் கருத்தப்படும் சூரியமண்டலத்தின் ஆரம்ப கால இரசாயனக் கட்டமைப்புக்கள் பற்றியும் பிரபஞ்சத்தின் தன்மைகள் பற்றியும் கண்டறிய வாய்ப்புக் கிடைப்பதுடன், பிரபஞ்சத்தில் எப்படி உயிரினங்கள் தோன்றின என்று தீர்மானிக்கக் கூடிய புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் இவ்வாய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகள், தமது திட்டத்தின் ஆரம்ப வெற்றியைக் கொண்டாடியபடி அறியத்தருகின்றனர்...!

இந்த மொத்துகை ஒரு 747 விமானம் மீது ஒரு நுளம்பு மோதுவதற்கு நிகரானதாக இருப்பினும்...அதன் விளைவுகளை அவதானிப்பதே முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்படுகிறது...!

இந்த சாதனைமிக்க செயற்கையான விண் மொத்துகைக்கு உள்ளாக்கப்பட்ட வால்நட்சத்திரத்தின் பருமன் சுமார் 14 கிலோமீற்றர்கள் வரை இருக்கும் என்று தெரிகிறது. இந்த மொத்துகையின் விளைவுகளை, ஆள ஊடுருவி மோத விட்டு ஆய்வு செய்யும் தாய் விண்கலம், வால்நட்சத்திரத்தில் இருந்து வெறும் 500 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து தொடர்ந்து கமராக்கள் மற்றும் இதர உணரிகள் (sensors) கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன...! மேலதிக படங்களும் விபரங்களும் கிடைக்கும் போது அவை இயலுமானவரை இங்கு தரப்படும்...!



மோதலுக்கு சில விநாடிகளுக்கு முன்னர்.. தாய் விண்கலம் அனுப்பிய மொத்துகைத் திணிவில் (impactor) இருந்த கமரா பிடித்தனுப்பிய வால்நட்சத்திரத்தின் மேற்பரப்புக் காட்சி...!



வெற்றிக் களிப்பில் நாசா விஞ்ஞானிகள்..!



மொத்துகை தொடர்பான விளக்கப்படம்

மேலதிக தகவல்களுக்கும் அனிமேசன் படங்களுக்கும் இங்கு அழுத்துக...!

பதிந்தது <-குருவிகள்-> at 10:43 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க