Wednesday, July 20, 2005

சந்திரனில் மனிதனும் சந்திர மரங்களும்..!



தற்போதும் அமெரிக்காவில் உயிர் வாழும் சந்திர மரங்கள்...!


யூலைத் திங்கள் 20ம் நாள் 1969ம் ஆண்டு மனித வரலாற்றில் முக்கியமான விண்ணியல் சாதனை நிகழ்ந்த நாள்..! அன்றுதான் அமெரிக்க விண்வெளிவீரர்களான Neil A. Armstrong, Commander; Edwin E. Aldrin, Lunar Module Pilot; Michael Collins, Command Module Pilot, ஆகியோர் முதன்முதலில் சந்திரனில் கால்பதித்த நாள்...! அதுவரை அபூர்வமாக தெய்வமாக உவமையாக விளங்கிய சந்திரன் அன்றிருந்து தான் ஆராய்ச்சிக்குரியதானது...!

அதன் பின்னர் மேலும் 5 பயணங்கள் அப்பலோ விண்ணோடம் மூலம் சந்திரனுக்கு நடத்தப்பட்டுள்ளன...! அதில் அப்பலோ 14 என்ற விண்ணோடம் மூலம் பெப்ரவரித் திங்கள் 5ம் நாள் 1971ம் ஆண்டு சந்திரனை நோக்கிப் பயணித்த விண்வெளி வீரர்களில் ஒருவரான Stuart A. Roosa, Command Module Pilot, தனது பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட காலுறை அளவுப் பைக்குள் தனக்குப் பிடித்தமானதும் அமெரிக்க வனத்துறை மற்றும் தாவரப் பிறப்புரிமையியல் ஆய்வாளர்களின் பரிந்துரைக்கு உட்பட்டதுமான மரத்தின் விதைகளை எடுத்துச் சென்று அதைச் சந்திரனில் வெளிப்படுத்தி மீண்டும் பூமிக்கு கொண்டு வந்துள்ளார்...!

அந்த விதைகள் முளைத்து வந்த வழித்தோன்றல்கள்...மாற்றங்கள் ஏதும் இன்றி இன்றும் சந்திர மரங்களாக (Moon Trees) உலகின் பல பகுதிகளில் வாழ்கின்றன அத்துடன் அவை ஞாபகார்த்தமாக வளர்க்கப்பட்டும் வருகின்றன...!

இந்த சந்திர மரங்கள் பற்றி இன்றுதான் எமக்கு அறியக் கிடைத்தது...உங்களுக்கு எப்படி...??!




மர விதைகளை சந்திரனுக்கு எடுத்துச் சென்ற விண்வெளி வீரர் Stuart Roosa

மனிதன் சந்திரனில் கால் பதித்த இடங்கள் மற்றும் விபரங்கள் பற்றி பட விபரணத்துக்கு இங்கு அழுத்துங்கள்..!

சந்திர மரங்கள் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்துங்கள்..!

பதிந்தது <-குருவிகள்-> at 9:29 am

1 மறுமொழிகள்:

Blogger வானம்பாடி விளம்பியவை...

பகிர்தலுக்கு நன்றி!

Wed Jul 20, 10:11:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க