Tuesday, July 26, 2005

டிஸ்கவரி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது..!



இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கொலம்பியா விண்கலம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அமெரிக்காவால் ஏவப்படும் முதலாவது விண்கலமான டிஸ்கவரி, இன்று புளோரிடாவின் கேப் கனவரல் என்னும் இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

டிஸ்கவரி விண்ணில் எழுந்து சென்ற போது அதனைப் பல விண் ஆய்வாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்; நாசா விண்வெளி ஆய்வு கூடத்தின் இருந்து அதன் கட்டுப்பாட்டாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அந்த விண்கலத்தில் உள்ள 7 விஞ்ஞானிகளும் தற்போது அதனை விண் சுற்றுப்பாதையை நோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னர் திட்டமிட்டபடி சர்வதேச விண் ஆய்வு கூடத்துடன் இன்னும் இரு நாட்களில் அவர்கள் இணையவுள்ளனர்.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சுமார் இரு வாரங்கள் தாமதமான டிஸ்கவரி நிதானமாக ஏவப்பட்டது குறித்து அங்கு ஒரு ஆறுதல் காணப்பட்டதாக அங்குள்ள ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

BBC Tamil

பதிந்தது <-குருவிகள்-> at 10:19 pm

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

இதுவரைக்கும் எதுவிதமான சிக்கலில்லாதபோதுங்கூட, இந்த முறையும் எழும்பிச்செல்லுகையிலே, உந்துகணையிலிருந்து துண்டங்கள் விழுந்திருக்கின்றன.

Tue Jul 26, 10:41:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க