Wednesday, July 27, 2005

டிஸ்கவரியை ஏவிய போது ஏற்பட்ட பாதிப்புக்களால் பீதி..!



டிஸ்க்கவரி விண் ஓடம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டபோது அந்த ஓடத்தின் கீழ்பகுதியில் இருக்கும் வெப்பத் தடுப்பு ஓடு சிறிய அளவில் உடைந்து வீழ்ந்துள்ளது தொடர்பிலும், வெளிப்புற எரிபொருள் தாங்கியிலிருந்து கறுப்பு நிறப் பொருளொன்று வீழ்ந்தது தொடர்பிலும் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலம்பியா விண் ஓடம் விண்ணில் வெடித்துச் சிதறியதை அடுத்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக விண் ஓடங்களை விண்ணில் செலுத்துவதை இடைநிறுத்தியிருந்த நாசா விண்ணாய்வுக் கழகம் நேற்று டிஸ்க்கவரி விண் ஓடத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

டிஸ்க்கவரி ஓடம் விண்ணில் செலுத்தப்பட்ட போது அதில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்படக் கருவி ஓடத்தின் கீழ் பகுதியிலிருந்து சிறிய துண்டுகள் உடைந்து வீழ்வதை படம் பிடித்தது. இந்த வீடியோ ஒளிப்படத்தை நுணுக்கமாக ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஓடத்தின் கீழ்பகுதியில் உள்ள வெப்பத் தடுப்பு ஒடு சிறிய அளவில் உடைந்து வீழ்ந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். சுமார் ஓன்றரை அங்குல அளவிற்கு வெப்பத் தடுப்பு ஓடு உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று விண் ஓடத்தின் வெளிப்புற எரிபொருள் தாங்கியிலிருந்து கறுப்பு நிற பொருள் ஒன்று வீழ்வதை தரையிலிருந்த சில ஊடகவியலாளர்கள் படம் பிடித்துள்ளனர்.

இந்த இரு சம்பவங்களாலும் விண் ஓடத்திற்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமா என்பது தொடர்பில் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருவகின்றனர்.

நன்றி - சங்கதி.கொம்

மேலதிக விபரங்கள் இங்கு - ஆங்கிலம்

பதிந்தது <-குருவிகள்-> at 8:19 am

1 மறுமொழிகள்:

Blogger U.P.Tharsan விளம்பியவை...

//ஐயரை வச்சு மந்திரம் ஓதி வீல்ல எலுமிச்சம் பழம் வச்சிருந்தா எந்த தடங்களும் வந்திருக்காது.//

:-))

Wed Jul 27, 10:56:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க