Wednesday, November 09, 2005

பத்தாண்டுகள் கழித்து வெள்ளிக் கிரகம் நோக்கி ஓர் பயணம்..!



வெள்ளிக்கிரகத்தை நெருங்கி வலம்வந்து அதை ஆய்வு செய்ய உள்ள செயற்கைக் கோள்

வெள்ளிக்கிரகம் நோக்கி ஐயோப்பிய விண்ணியல் ஆய்வு நிறுவத்தின் (ESA) செயற்கைக் கோள் (Europe's Venus Express probe) ஒன்று ரஷ்சிய உந்துவாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செயற்கைக் கோள் வெள்ளிக் கிரகத்தை மிக நெருங்கி அதன் காற்றுமண்டலம் குறித்தும் அங்கு பச்சைவீட்டு வாயுக்களின் (பிரதானமாக காபனீரொக்சைட்) விளைவால் ஏற்படும் சூழல் வெப்பமாதல் குறித்தும் பல ஆய்வுகளைச் செய்ய உள்ளதாம்..!

வெள்ளிக்கிரகத்தின் காற்று மண்டலம் காபனீரொடக்சைட் வாயுவை பெரிய அளவிலும் சிறிதளவு நைதரசன் வாயுவையும் மற்றும் இதர வாயுக்களை மிகச் சிறிய அளவிலும் உள்ளடக்கி உள்ளது. அதன் காற்றழுத்தம் பூமியினதை விட 90 மடங்கு அதிகம். அங்கு மேற்பரப்பு வெப்பநிலை என்பது 467 பாகை செல்சியஸ் ஆகும். இதன் பருமன் கிட்டத்தட்ட பூமியின் அளவினது ஆகும்.



1. Launch from Baikonur, Russia, November 2005
2. First burn of Fregat rocket booster propels probe from suborbital trajectory into a circular parking orbit
3. Second Fregat burn sends the probe into an interplanetary flight trajectory
4. Its fuel spent, Fregat detaches; spacecraft continues to Venus

வெள்ளிக்கிரகத்தை ஆய்வு செய்யச் செல்லும் செயற்கைக் கோளின் பயணப்பாதை..!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 4:56 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க