Wednesday, January 25, 2006

பூமியை ஒத்த கோள் கண்டுபிடிப்பு..!



பூமியைப் போல 5 மடங்கு திணிவைக் கொண்டதும் இயல்புகளில் கிட்டத்தட்ட பூமியை ஒத்தது என்று கருதத்தக்கதுமான சிறிய கோள் ஒன்றை 25,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் பால்வீதியில் சர்வதேச விண்ணியலாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனராம் என்று அறிவிக்கப்படுகிறது. OGLE-2005-BLG-390Lb எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனை ஒத்ததும் ஆனால் ஒப்பீட்டளவில் சிறியதும் குளிர்ச்சியானதுமான அதன் தாய் நட்சத்திரத்தை 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வலம் வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது பூமி உள்ளதை ஒத்த ஒரு உடுத்தொகுதியில் (galaxy) இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இது பால்வீதி உடுத்தோகுதியில் galactic மையத்தை அண்மித்துக் காணப்படுகிறதாம்.



galactic மையம் (Galactic centre )பெட்டியால் குறியிடப்படுகிறது.

மேலதிக தகவல் இங்கு

மேலும் ஒரு இணைப்பு

பதிந்தது <-குருவிகள்-> at 10:27 pm

3 மறுமொழிகள்:

Blogger Santhosh விளம்பியவை...

ஆனா அங்க என்னய மாதிரி புத்திசாலியா ஒரு பய கிடைப்பானா? :)) ரொம்ப நல்ல செய்தி.

Wed Jan 25, 11:01:00 pm GMT  
Blogger சிவா விளம்பியவை...

நண்பரே

எனக்கு ரொம்ப புடிச்ச அஸ்ரானமி பற்றி போட்டிருக்கீங்களே. ரொம்ப நல்லா இருக்கு உங்க செய்தி. இனி அடிக்கடி வந்து பார்க்கிறேன்.

Wed Jan 25, 11:09:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

சந்தோஷ் உங்கள குலோன் பண்ணி அங்க வைச்சிட்டா காரியம் முடிஞ்சு. நன்றி உங்கள் வருகைக்கு சந்தோஷ்.

சிவா வாங்க வந்து படியுங்க..நீங்களும் படிக்கனும் என்றுதான் எழுதிறங்க. வருகைக்கு நன்றிகள் சிவா.

Fri Jan 27, 08:44:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க