Tuesday, January 17, 2006

புளுட்டோவுக்கான நாசாவின் பயணம்.



18-01-2006 இல் ஏவுவதற்கு ஏற்ற வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள உந்துவாகனம்.

2015 இல் சூரியக் குடும்பத்தின் இறுதிக் கோளான புளுட்டோவை அடையத்தக்க வகையில், அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புளுட்டோனிய எரிபொருளில் இயங்கத்தக்க வகையில் விண்கலம் ஒன்றை சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்து விண்ணுக்கு அனுப்ப இருக்கிறது. புளுட்டோ -223 பாகை செல்சியஸ் வெப்பநிலையுடைய கோளாகும். இதன் தோற்றம் மற்றும் இயல்புகள் தொடர்பிலும் உபகோள் தொடர்பிலும் குறித்த விண்கலம் ஆய்வுசெய்ய உள்ளது.



புளூட்டோவையும் அதற்கு அப்பால் உள்ள Kuiper Belt யையும் ஆய்வு செய்யவுள்ள விண்கலம்



விண்கலத்தின் பயணப்பாதையும் இடையில் அது சந்திக்க உள்ள பிற கிரகங்களும் துணைக்கோள்களும்.

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 10:09 pm

3 மறுமொழிகள்:

Blogger kuruvikal விளம்பியவை...

This comment has been removed by a blog administrator.

Wed Jan 18, 07:23:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

இன்று லோஞ்சிங் இடம்பெறவில்லை. மேலும் 24 மணி நேரத்துக்கு பின்போடப்பட்டுள்ளது.

Wed Jan 18, 07:29:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

புளூட்டோவுக்கான பயணம் இன்று ( 19-01-2006)வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

கீழுள்ள இணைப்பில் இந்த விண்கல செலுத்துகையை ஒளி வடிவில் காணலாம்.

http://news.bbc.co.uk/nolavconsole/shared/player/player.stm?title=Pluto probe launches from Florida&clipurl=http://news.bbc.co.uk/media/avdb/news_web/video/9012da680033910/nb/09012da680033959_16x9_nb!asx&cs=news

Thu Jan 19, 09:59:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க