Thursday, January 26, 2006

மிகச்சிறிய மருத்துவ ரோபோக்கள்.



வெறும் 15 மில்லிமீற்றர்கள் விட்டமுடைய மருத்துவ சத்திர சிகிச்சைகளில் பயனபடுத்தக்கூடிய சிறிய ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு பன்றி போன்ற விலங்குகளில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளன.

கமரா மற்றும் இதர அவசியமான கருவிகள் பொருத்தப்பட்ட இச்சிறிய ரோபோக்கள், வாய் மூலம் உடலுக்குள் அனுப்பப்பட்டு அவை தொழிற்பட வேண்டிய இடம் நோக்கி நகர்ந்ததும் சிறிய தூவரம் மூலம் ரோபோக்கள் சரியான வகையில் நிலைநிறுத்தப்படும். பின் அவற்றின் உதவி கொண்டு உடலில் உட்பாகங்கள் தெளிவாக பரிசோதிக்கப்பட்டு நுட்பமான மறையில் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. லபறோஸ்கோப்பிக் (laparoscopic) கமராக்கள் பாவிக்கப்பட்டு செய்யப்படும் சத்திரசிகிச்சையிலும் இது இலகுவானதாக அமைந்திருக்கிறதாம். அதுமட்டமன்றி இவை கொண்டுள்ள சக்கரங்கள் மூலம் இவை உடலினுள் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நகர்த்தப்படவும் முடியுமாம்.

எதிர்காலத்தில் இவை மனிதரிலும் சத்திரசிகிச்சைகளை எளிமையாக்க பயன்படுத்தப்படலாம்.

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:31 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க