Saturday, January 28, 2006

செவ்வாய்மீதொரு தாக்குதல்



அமெரிக்க நாசா விண்வெளி நிலையம் அண்மையில் Tempel - 1 வால்நட்சத்திரம் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு இது குறித்த பதிவுக்குச் செல்க ஒத்த தாக்குதலை செவ்வாய்க் கிரகத்தின் மீது மேற்கொண்டு செவ்வாயின் தரை மேற்பரப்பின் கீழ் நீர் அல்லது பனிக்கட்டி அல்லது காபன் சார்ந்த மூகக்கூறுகளின் பிரச்சனம் பற்றிய ஆய்வில் ஈடுபட இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான விண்வெளிப் பயணம் "Phoenix" என்று நாமம் பொறிக்கப்பட்டு 2007 வாக்கில் ஆரம்பிக்கப்பட இருக்கிறதாம்.

இதன் போது சுமார் 100 கிலோகிராம் நிறையுடைய திணிவொன்று சுமார் 15,000 கிலோமீற்றர்கள்/ மணி எனும் வேகத்தில் செவ்வாயின் மீது மோதி 50 மீற்றர்கள் விட்டமுடையதும் 25 மீற்றர்கள் ஆழமுடையதுமான குழியைத் தோற்றுவிக்கும் என்றும் மோதலின் பின் கிளம்பும் தூசுப்படையை ஆய்வுக்குச் செல்லும் தாய்க்கலம் ஆய்வுசெய்யும் என்றும் குறித்த மோதலுக்காக திட்டத்தை வரைந்தோர் தெரிவிக்கின்றனர்.!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 11:01 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

அங்கும் தாங்குதலா பார்ப்போம் என்ன முடிவுவாகிறது என்றும் தான்.

Sun Jan 29, 12:50:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க