Saturday, February 11, 2006

விமானப் பறப்பில் புதிய சாதனை..!



சாதனைப் பறப்பின் போது Virgin Atlantic GlobalFlyer விமானம்.

ம்ம்.. 61 வயதில் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று கேட்டே மனிதர்களின் முயற்சிகளை முடக்கிவிடும் உலகில் 61 வயது நிறைந்த Steve Fossett என்ற சாதனையாளர் உலகை Atlantic GlobalFlyer எனும் நீண்ட நேரம் பறக்கக் கூடிய விமானம் மூலம் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்..! கடந்த புதனன்று (08-02-2006) அன்று அமெரிக்காவில் இருந்து ஆரம்பமான பறப்பு இன்று (11-02-2006) பிரித்தானியாவில் தரையிறங்கியதுடன் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சாதனைப் பறப்பின் போது Steve Fossett மொத்தம் 26,389.3 மைல்கள் உலகைச் சுற்றி விமானம் மூலம் ஓய்வின்றிப் பறந்திருக்கிறார். இதுவே ஒரு விமானப் பறப்பின் போது ஓய்வின்றி அதிக தூரம் பறந்த உலக சாதனையும் ஆகிறது..!



சாதனையாளர் (வலம்) விமானத்துடன்.



சாதனையை முடித்துக் கொண்டு சாதனையாளர் விமானத்தை விட்டிறக்கும் காட்சி..!



விமானத்தின் பயணப்பாதை. (இறுதி நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனையால் விமானம் பிரித்தானிய Manston விமான தளத்தில் இறங்காமல் Bournemouth இல் உள்ள விமானதளத்தில் இறக்கப்பட்டது..!)

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:28 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க