Friday, August 25, 2006

எனிக் கோள்கள் எட்டு (8)



சர்வதேச விண்ணியலாளர்களின் கூட்டமைப்பின் (International Astronomical Union) மிகச் சமீபத்திய முடிவின் பிரகாரம் சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்டு வந்த புளூட்டோ அதற்கான தகைமையை இழந்து ஒரு உபகோள் (Dwarf planet) நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால்..எனி சூரிய குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை என்பது எட்டாக இருக்கும்..அடுத்த கண்டுபிடிப்பு வரும் வரை. 1930 இல் புளூட்டோ கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனிப் பாட நூல்களிலும்..சூரியக் குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை எட்டு என்றே குறிப்பிடப்பட இருக்கின்றது..!

மேலதிக விபரம்

இவ்வறிவிப்பைத் தொடர்ந்து நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு கீழுள்ள இணைப்பை அணுகவும்.

வாதப் பிரதிவாதங்கள் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 1:32 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க