Monday, September 18, 2006

விண்ணோக்கிப் பாய்ந்த பெண் சுற்றுலாப் பயணி.



உலகின் முதலாவது பெண் விண்வெளிச் சுற்றுலாப் பயணி

உலகின் முதலாவது பெண் விண்வெளிச் சுற்றுலாப் பயணி இன்று கசகிஸ்தானின் இருந்து ரஷ்சியத் தயாரிப்பு உந்து வாகனம் - Russian Soyuz rocket - மூலம் ஐ எஸ் எஸ் - ISS- என்று அழைக்கப்படும் பன்னாட்டு உரிமம் உடைய விண்ணில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி சர்வதேச விண்ணிலையத்துக்குரிய புதிய ரஷ்சிய விண்வெளிக் குழுவினருடன் செலுத்தப்பட்டுள்ளார்.

ஈரானில் பிறந்தவரும் அமெரிக்க பிரஜா உரிமை பெற்றவரும் வர்த்தகருமான Ms Ansari எனும் 40 அகவையுடைய பெண்மணியே இந்தப் பயணத்தை மேற்கொண்டு உலக விண்வெளிப் பயண வரலாற்றில் தன் பெயரைப் பதிவு செய்துள்ளதுடன் இதற்காக அவர் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை பயணச் செலவுத் தொகையாக ரஷ்சியாவுக்கு செலுத்தியுள்ளார்.


உந்துவாகனம் Russian Soyuz விண்ணில் பாயும் காட்சி

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 11:28 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க