Wednesday, September 06, 2006

தோல் புற்றுக்கு எதிராக Gene therapy



சிகிச்சை முறை..படத்துடன் நோக்குக..!

1. Blood taken from patient
2. T cells infected with virus to carry key genes into them
3. DNA from genes helps cells develop receptors
4. Modified cells injected back into patient
5. Receptors target cancerous cells to be killed

புற்றுநோய்க்கு (Cancer) எதிரான பிறப்புரிமை அலகுச் சிகிச்சை (Gene therapy) வெற்றியளித்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிலையம் அறியத்தந்துள்ளது.

இச் சிகிச்சை முற்றிய தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 17 பேரில் இரண்டு பேருக்கு அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 18 மாதங்களின் பின் முற்றாக குறித்த நோயில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சிகிச்சை முறையானது ஜீன் திரபி (Gene therapy) முறையில் அமைந்திருந்தது. இதன்படி உடலில் உள்ள ஒருவகை நிர்ப்பீடனக் கலமான (immune cell) ரி செல்களினுள் (T cell) வைரஸ் ஜீன் காவிகளைப் பயன்படுத்தி (virus gene carring vector) றிசப்பற்றர் ஜீன் (receptor gene) புகுத்தப்பட்டு புற்றுநோய்க் கலங்களைத் தாக்கக் கூடிய வகையில் ரி செல்கள் மாற்றியமைக்கப்பட்டு பின் நோயாளியின் உடலில் அவை செலுத்தப்பட்டு இச்சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் போது..இந்த ரி கலங்கள் புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளான கலங்களைத் தாக்கி அழித்துள்ளதுடன்..குறித்த ரி வகை கலங்கள் உடலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மீள உருவாக்கவும் பட்டுள்ளன. (இருப்பினும் இன்னும் மாற்றியமைக்கப்பட்ட ரி வகைக் கலங்கள் உடலில் கூடிய அளவுக்கு தப்பிப்பிழைத்திருக்க ஏதுவான வழி வகைகள் குறித்து ஆய்வாளர்கள் தற்போது கவனமெடுத்து வருகின்றனர்)

அந்த வகையில் இது புற்றுநோயை முற்றாகக் குணப்படுத்தக் கூடிய நிலைக்குகொண்டு சென்றுள்ளது. இவ்வகையான சிகிச்சை முறைகளை எதிர்காலத்தில் மற்றைய புற்றுநோய்களுக்கு எதிராகவும் பாவிக்கப்பட முடியும் என்று மருத்துவ உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்..! இது புற்றுநோய் சிகிச்சை முறைகளில் கூடிய பயனளித்துள்ள சிகிச்சைமுறையாக தற்போது நோக்கப்படுகிறது..!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 10:36 pm

4 மறுமொழிகள்:

Blogger Sivabalan விளம்பியவை...

நல்ல தகவல்

அருமையான பதிவு..

தொடரட்டும் உங்கள் இந்த மேலான பணி..

Thu Sept 07, 04:54:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

வணக்கம் சிவபாலன். உங்கள் வரவுக்கு நன்றிகள். எம்மால் இயன்றளவு எங்கள் பணி தொடரும். உங்கள் வரவுகளும் பதிவுகளுமே எங்கள் ஊக்கம்..!

நட்புடன் குருவிகள்.

Thu Sept 07, 07:15:00 am BST  
Blogger Thirumozhian விளம்பியவை...

குருவி அவர்களே,

அருமையான பதிவு தந்திருக்கிறீர்கள். தமிழ்ப்பதங்களுக்குச் சிரமப்பட்டிருக்கிறீர்கள் என்றாலும் முயற்சி பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்கள்!

படத்திற்கான விளக்கத்தில் மூன்றாவது விளக்க வாக்கியத்தில் சிறு தவறு இருப்பதாக எண்ணுகிறேன்.

//3 DNA from genes helps cells develop receptors//
என்பது

3. Genes of transformed DNA help cells to develop receptors

என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

திருமொழியான்.

Sat Sept 09, 12:31:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி நண்பரே..உங்கள் வரவுக்கும் உங்கள் பதிவுக்கும்.

நீங்கள் சுட்டிக்காட்டிய...விடயம் கவனத்தில் கொள்ளப்படுகிறது.

நட்புடன் குருவிகள்..!

Sun Sept 10, 09:54:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க