Monday, October 30, 2006

புவி வெப்பமடைவதைத் தடுக்க ஐ.நா அவசர நடவடிக்கை கோருகிறது



புவி வெப்பமடைவது குறித்து அவசர சர்வதேச நடவடிக்கை கோரி ஒரு புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சீதோஷ்ண நிலை மாறுவதற்குக் காரணமானதாகக் கூறப்படும் வாயுக்களை வெளியிடுவதை, உற்பத்தி செய்வதைக் குறைப்பதில் செல்வந்த நாடுகள் முன்னேற்றம் எதையும் காணவில்லை என்று காட்டும் ஒரு புதிய கணக்கீட்டை ஐ.நா மன்றம் வெளியிட்டிருக்கிறது.

இந்த வாயு வெளியிடுவதைக் கணக்கிலெடுக்க ஒரு முக்கிய குறியீட்டுக் காலமாகக் கருதப்படும், 1990க்கும் 2004க்கும் இடையே, தொழில் வளமிக்க நாடுகள், உற்பத்தி செய்த வாயுக்களின் அளவில் காணப்பட்ட மூன்று சதவீத குறைப்பு என்பது, கம்யூனிச அரசுகள் கிழக்கு ஐரோப்பாவில் வீழ்ந்ததன் காரணமாக அங்கு பல ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதன் விளைவே என்று இந்த கணக்கீடு காட்டுகிறது.

இந்தக் கணக்கீட்டின் கீழ் கண்காணிக்கப்பட்ட, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாற்பது நாடுகளில், இந்த வாயு வெளியிடுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்ததாகவும், இந்த உயர்வு என்பது, முந்தைய சோவியத் ஒன்றியக் குடையின் கீழ் இருந்த நாடுகளின் பொருளாதரங்கள் மீண்டும் இப்போது புத்துயிர் பெறுவதால் மேலும் கூடுகிறது என்றும் அது கூறுகிறது.

செய்தி - பிபிசித் தமிழ்.

பதிந்தது <-குருவிகள்-> at 7:51 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க