Thursday, November 16, 2006

தொடுப்புக்கள் இல்லாத சக்தியூட்டல்



கண்டறியப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம்.

1) Power from mains to antenna, which is made of copper
2) Antenna resonates at a frequency of 6.4MHz, emitting electromagnetic waves
3) 'Tails' of energy from antenna 'tunnel' up to 5m (16.4ft)
4) Electricity picked up by laptop's antenna, which must also be resonating at 6.4MHz. Energy used to re-charge device
5) Energy not transferred to laptop re-absorbed by source antenna. People/other objects not affected as not resonating at 6.4MHz

இப்போதெல்லாம் தொடுப்புக்கள் (வயர்) இல்லாத கருவிகளின் பாவனை அதிகரித்து வருகிறது. செல்லிடத்தொலைபேசிகள் (செல்போன்) தொடங்கி பல உபகரணங்கள் தொடுப்புக்கள் இல்லாமலே மின் காந்த அலைகள் மூலம் இணைக்கப்படுகின்றன. இதே வகைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடுப்புக்களற்ற வகையில் மின்னியல் சாதனங்களை இயக்கவும் அவற்றிற்கு மின்சக்தி ஊட்டவும் வகை செய்யும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.



பிரித்தானிய நிறுவனம் அறிமுகப்படுத்திய பொறிமுறையும் உபகரணமும்.

(The pad uses magnetic induction to charge the devices)

இது பிரித்தானியாவைச் சேர்ந்த Splashpower எனும் நிறுவனம் தயாரித்துள்ள தொடுப்புகளற்ற வகையில் காந்தப் புலத்தைப் பயன்படுத்தி மின்னியல் உபகரணங்களுக்கு மின் சக்தியூட்டல் பொறிமுறையை ஒத்து மின்காந்த அலைகளைப் பயன்படுத்தும் வகையில் அமெரிக்கப் பொறிமுறை அமைந்திருக்கிறது.

எதிர்காலத்தில் குதைகளின் பாவனையும் தொடுப்புக்களின் பாவனையும் (plugs and cables) நேற்றைய தொழில்நுட்பம் என்று பேசப்படத்தான் போகின்றன போலும்.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 3:31 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க