Wednesday, November 22, 2006

இவரைப் பாருங்களேன்.. வித்தியாசமான மனிதர்.



இயந்திர மனிதனை உற்பத்தி செய்வதில் எப்பவும் ஜப்பானுக்கு ஒரு அலாதிப் பிரியம். இதோ இம்முறை ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு இயந்திர மனிதன் வைத்திசயாலையில் வரவேற்பாளராக இருந்து குறித்த வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் பேசும் குரல்களை விளங்கிக் கொண்டு அவர்களுக்கு பதிலும் சொல்லி வழிகாட்டுகின்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

எதிர்காலத்தில் இவரை பகுதி நேர வரவேற்பாளராக வைத்தியசாலையில் வேலை பார்க்க அனுமதிக்கப் போகின்றனர். இவருக்கு சம்பளம் என்ன தெரியுமா 900 அமெரிக்க டொலர்கள் அதுவும் இரண்டு மணி நேர வேலைக்கு.

இலத்திரனியல் தொழில்நுட்ப உதவியுடன் உலகமே தானியங்கி இயந்திரமயமாகிக் கொண்டிருக்கிறது போலும்.

"A robot guide at the Aizu Central Hospital, Japan. 'Ubiko" can recognize human voices and speak to visitors. Manufacturer Tmsuk and manpower company Ubix will start offering the robot as a temporary receptionist for 105,000 yen (900 USD) for a two-hour shift."

தகவல் பெறப்பட்ட இடம் bbc.com

பதிந்தது <-குருவிகள்-> at 7:47 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க