Saturday, November 18, 2006

இந்தியாவுக்கு கைமாறும் அமெரிக்க F-16 & F/A -18 யுத்த விமானங்கள்



F/A-18 ரக அமெரிக்க சண்டை விமானமும் காவும் ஆயுத வகைகளும்.



F-16 சண்டை விமானமும் காவும் ஆயுதங்களும்.

சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் உலக பாதுகாப்பு நிலவரமும் மாறி வருகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் நாய் கடி பூனை கடி நிலையில் இருந்த காலம் மலையேறி ஒன்றரை தசாப்தங்கள் முடிந்த நிலையில் தற்போது அமெரிக்கப் F-16 மற்றும் F/A-18 ரக பல நோக்குச் சண்டை விமானங்கள் 126 யைப் பெற இந்தியா 6.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிமிக்க உடன்பாடொன்றை அமெரிக்காவோடு செய்யவுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் புஷ்ஷும் அவர் நிர்வாகமும் தமது சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர். முதலில் சில டசின் விமானங்கள் நேரடியாக இந்தியாவிடம் கையளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,126 இல் மிகுதி அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் கட்டப்படவுள்ளது.

நேற்றைய எதிரிகள் இன்றைய நண்பர்கள். உலக பாதுகாப்பு வலையில் அமெரிக்காவின் பிடிக்குள் சிக்குகிறதா இந்தியா...???!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 4:52 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

இந்தியா அமெரிக்காவை வலுவான வல்லரச்சாக்குது. நீங்கள் என்னவோ சொல்கிறீர்கள். 6.8 பில்லியன் டொலர் சும்மாவா?

Sat Nov 18, 08:32:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க