Saturday, December 16, 2006

மோசமான காச நோய்ப் பரவலுக்கான எச்சரிக்கை..!



Mycobacterium tuberculosis பக்ரீரியா

உலகில் குறித்த ஒரு காலப்பகுதில் மனிதரில் பேரழிவை ஏற்படுத்தி வந்த காச நோய்க்கான Mycobacterium tuberculosis எனும் பக்ரீரியா (bacteria) பிற்காலத்தில் இரசாயனச் சிகிச்சை முறைகளின் (மருந்துகள்) கீழ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும்... நடைமுறையில் உள்ள கூட்டு மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துகளுக்கு எதிர்ப்பைப் பெற்ற இந்த பக்ரீரியாக்களின் சில வகைகள் (XDR-TB) உலகின் பல பாகங்களிலும் மோசமான காச நோயை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகளை கொண்டுள்ளதூ கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா ரஷ்சியா இந்தியா போன்ற நாடுகளில் இந்த நிலை அதிகம் காணப்படினும் உலகில் மேலும் சில பகுதியில் இந்தத் தன்மை கொண்ட பக்ரீரியாக்கள் பரவிக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது.



காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் சுவாசப்பையின் தோற்றம். அம்புக்குறிகள் காச நோய்ப் பாதிக்கப்பட்ட பகுதியைக் காட்டுகின்றன. அங்குதான் பெருமளவில் காச நோய் பக்ரீரியாக்கள் பெருகி இருக்கும்.

உலகின் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகையில் காச நோய்க்கான பக்ரீரியா தொற்றிக் காணப்படுவதுடன் ஆண்டுக்கு 8.9 மில்லியன் மக்கள் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர். இந்த நிலையில் மருந்துகளுக்கு எதிர்ப்புக் காட்டி வரும் பக்ரீரியாவின் பெருக்கம் மீண்டும் மோசமான தொற்று நோய் மூல மனிதப் பேரவலம் ஒன்றுக்கு வித்திடலாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளை எதிர்க்கும் பக்ரீரியாக்கள் உருவாக மருந்துகளின் தவறான பாவனையும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை அவர்கள் சரிவரக் கையாழாமையயுமே முக்கிய காரணிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

மேலதிக தகவல் இங்கு...

பதிந்தது <-குருவிகள்-> at 4:09 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க