Wednesday, December 13, 2006

சுன்னத்து (Circumcision) எச் ஐ வி தொற்றலைக் கட்டுப்படுத்துகிறது..?!



உலகெங்கும் பல மில்லியன் மனிதர்களைத் தாக்கியுள்ள எச் ஐ வி எனும் எயிட்ஸ் நோய்க்கான வைரஸின் தொற்றுகை சுன்னத்துச் (Circumcision) செய்யப்பட்ட ஆண்களில் குறைத்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்த போதும் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் பல தடவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.

சுன்னத்துச் செய்யப்பட்ட ஆண்களின் பாலுறுப்பின் முற்பகுதியில் உள்ள கலங்கள் உணர்வு குறைந்து போவதும் குருதி இழப்ப ஏற்படுவதைத் குறைக்கும் வகையில் தடிப்பாவதும் எச் ஐ வி வைரஸ் தொற்றுவதைத் குறைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்துக் கூறி உள்ள போதும், இவை இன்னும் சரி வர நிரூபிக்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவை நடைமுறைச் சாத்தியமாக்குவதில் சில சிக்கல்கள் இருப்பதுடன் இவ்வாய்வு முடிவு மீண்டும் பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளுக்கு மனிதர்களை இட்டுச் செல்லின் அது எச் ஐ வி பெருக்கத்தையே அதிகரிக்கச் செய்துவிடும் என்றும் அபாய எச்சரிக்கை செய்யப்படுகிறது.

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 6:36 pm

7 மறுமொழிகள்:

Blogger வஜ்ரா விளம்பியவை...

1000 பேரைவைத்து இப்படிச் சொல்வார்கள் இன்று 3000 பேரைவைத்து சோதித்துவிட்டு மாற்றிச் சொல்வார்கள் நாளை.

இதெல்லாம் with a pinch of salt எடுத்துக் கொள்ளவேண்டிய ஆராய்ச்சிகள் என்பது என் எண்ணம்.

Wed Dec 13, 08:08:00 pm GMT  
Blogger மாசிலா விளம்பியவை...

முற்றிலும் தவறான செய்தி.

காம தொற்று நோய் கிருமிகள் முக்கியமாக எச்.ஐ.வி ஆண்களின் சிறுநீர் துவாரத்தின் வழியாக உடலில் சென்று தாக்குகின்றது. ஆணுறை மட்டுமே இதற்கு முன் பாதுகாப்பான வழி. அவசரப்பட்டு மருத்துவ அமைப்புகளினால் அங்கீகரிக்க படாத தவறான தகவல்களை பரவவிட்டு சில உயிர்களை மோசம் போக விடாமல் பாதுகாப்போம்.

தமிழ்மணமோ அல்லது பதிவாலரோ முடிந்தால் உடனடியாக இந்த ஆபத்தான பதிவை விலக்கி விட பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் மாசிலா.
.

Wed Dec 13, 09:35:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

வரவுக்கு நன்றிகள் வஜ்ரா மற்றும் மாசிலா..

மாசிலா குறித்த பதிவு தரப்பட்ட ஆய்வுமுடிவுகளின் பிரகாரம் எழுதப்பட்டுள்ளது. அதில் நாமே இவை இன்னும் பல ஆய்வுகளுக்கு உட்பட வேண்டிய விடயம் என்பதையும் இவ்வறிவிப்பின் ஆபத்தினையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

இந்த ஆய்வு முடிவுகள் மேற்குலகில் பல பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

உங்களைப் போலவே எமக்கும் சமூக அக்கறை உண்டு. இருந்தாலும் உங்கள் அக்கறைக்கு எமது பணிவான நன்றிகள்.தொடர்ந்து தவறுகள் என்று கருதுபவற்றைச் சுட்டிக்காட்டுங்கள்.

நன்றி நட்புடன் குருவிகள்.

Fri Dec 15, 05:44:00 am GMT  
Blogger நல்லடியார் விளம்பியவை...

குருவிகள்,

தகவலுக்கு நன்றி. எயிட்ஸை ஒழிக்க எத்தனையோ இயக்கங்கள் பல்வேறு யுக்திகளைச் சொல்கிறார்கள். எயிட்ஸ் விழிப்புணவுக்காக நடத்தும் கூட்டங்களில் கூட ஆபாச நடனங்களோடுதான் சொன்னால்தான் மக்கள் கேட்கிறார்கள்.

விருத்தசேதனம் எனப்படும் Circumcision ஐ முஸ்லிம்கள் 100% பின்பற்றுகிறார்கள். முஸ்லிம்நாடுகளில் எயிட்ஸ் குறைவாக இருக்க இதுவும் ஒருகாரணம். முஸ்லிம்கள் பின்பற்றும் இப்பழக்கம் அவர்களுக்கு முன்பே யூதர்களும் கிறிஸ்தவர்களும் பின்பற்றி வந்ததே. வாழ்வியல் நெரியான இஸ்லாம் அதனை ஏற்றுக் கொண்டதில் நண்பர் வஜ்ரா போன்றவர்களுக்கு வேண்டுமானால் ஏற்க மனமில்லாமல் இருக்கலாம். அதில் வியப்பில்லை. 1000 பேரை சோதித்து அறிவித்தவர்கள் சாமன்யர்கள் அல்ல. பிரபல மருத்துவ அறிஞர்கள். மேலும் அறிக்கை வெளியிட்டது பிரபல அமைப்பு. http://today.reuters.com/news/articlenews.aspx?type=healthNews&storyID=2006-12-13T205927Z_01_N13463413_RTRUKOC_0_US-AIDS-CIRCUMCISION.xml&pageNumber=1&imageid=&cap=&sz=13&WTModLoc=NewsArt-C1-ArticlePage1 நீங்கள் சொல்வது போல் மூவாயிரம் பேரை சோதித்து தங்களின் அறிக்கை தவறு என்று சொல்லும்வரை இக்கூற்றை ஏற்போமே. (அறிவியலின் மற்ற கூற்றுகளையும் இதே அளவுகோலை வைத்து யாரும் ஒதுக்க மாட்டோம்)

மாசிலா அவர்கள் பதிவை தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். குருவிகள், விருத்தசேதனம் எயிட்ஸை முற்றிலும் தடுக்கும் என்று சொல்லவில்லை. குறைய வாய்ப்புண்டு என்பதையே சொல்லியுள்ளனர்.

வலைப்பூக்களில்/இணையத்தில் தவறான கருத்தைச் சொல்வதற்காக தமிழ்மணத்திலிருந்து நீக்க பரிந்துரைப்பது உள்நோக்கமுள்ளதோ?

குருவிகள்,

வாசகர்களுக்கு மற்றுமொரு உபயோகமான அறிவியல் செய்தியைத் தந்துள்ளீர்கள்.

என் பின்னூட்டத்தில் இஸ்லாத்தைக் குறிப்பிட வேண்டி இருந்தது பதிவுடன் தொடர்பாக இருந்ததனாலேயே என்பதை அறியவும். எனினும் இதுபற்றிய என் கருத்துக்களை மேலதிக தகவலுடன் என்பதிவில் விரைவில் எழுதுகிறேன். (இன்ஷா அல்லாஹ்!)

அன்புடன்,

Fri Dec 15, 07:01:00 pm GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

குருவிகள்,

தகவலுக்கு நன்றி. எயிட்ஸை ஒழிக்க எத்தனையோ இயக்கங்கள் பல்வேறு யுக்திகளைச் சொல்கிறார்கள். எயிட்ஸ் விழிப்புணவுக்காக நடத்தும் கூட்டங்களில் கூட ஆபாச நடனங்களோடுதான் சொன்

Fri Dec 15, 07:03:00 pm GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

http://sitharalkal.blogspot.com/2005/11/blog-post_15.html

Sat Dec 16, 07:14:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நல்லடியார் தங்கள் வருகைக்கும்..மேலதிக விளக்கங்களைப் பதிந்ததுக்கும் நன்றிகள்.

அனோனிமஸ் உங்களுக்கும் நன்றி. பகுத்தறிவு உங்களின் இணைப்பு நல்லடியாரின் கருத்தில் அமைந்துள்ள சில விடயங்களுடன் இணைப்புடையதாக இருக்கிறது நன்றிகள்.

தொடர்ந்து வாருங்கள். உங்கள் அபிப்பிராயங்களைத் தாருங்கள்.

( நேரப் பிரச்சனையால் உங்கள் பெறுமதியான பின்னூட்டங்கள் இங்கு வெளிப்படத்தாமதமாயினும் அவை நிச்சயம் வெளிப்பட வைக்கப்படும். எதிர்காலத்தில் விரைந்தே இவை வெளிப்பட வசதிகளை செய்ய முயற்சிக்கின்றோம். நன்றி)

நட்புடன் குருவிகள்.

Sat Dec 16, 01:02:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க