Friday, August 31, 2007

2029 இல் பூமியோடு மோதும் விண் பாறை..??!



விண்ணில் அவதானிக்கப்பட்ட 300 மீற்றர் விட்டமுடைய விண் பாறை (Apophis) 2029 வாக்கில் பூமியோடு மோதுமா அல்லது சுமார் 36,000km வித்தியாசத்தில் பூமியை மிக நெருங்கிக் கடந்து செல்லுமா என்பது குறித்து பரபரப்புத் தகவல்கள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பிரித்தானிய விஞ்ஞானிகள் Apex எனும் விண்கலம் ஒன்றை இந்தப் பாறையை நோக்கி அனுப்பி அதன் சுழற்சி, கட்டமைப்பு, பருமன் மற்றும் வெப்பநிலை தொடர்பான விபரங்களை அறிய உள்ளனர்.

இந்தப் பாறை தொடர்ந்து கண்காணிப்பட்டு அதன் பயணப்பாதையில் அது பூமியோடு மோதும் சாத்தியக் கூறுகளும் தொடர்ந்து ஆராயப்பட இருக்கின்றன. இவ்வகைப் பாறைகள் பூமியோடும் மோதும் பட்சத்தில் பூமி மேற்பரப்பில் பெரும் சேதங்களும் உயிரழிவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய இவ்வகை ஆபத்துக்களில் இருந்து தவிர்ப்பதற்கு பிரித்தானிய விஞ்ஞானிகள் செய்வது போன்ற ஆய்வுகள் பெரிதும் பயன்படும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது.



விண் பாறையைப் பரிசோதிக்க அனுப்ப உள்ள விண் கலத்தின் மாதிரி.!

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 7:27 am

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

உள்ள ஆபத்துக்கள் காணாது என்று இதுவும் வரப் போகிறதா. டைனோசோர்ஸ் போல மனிதனும் ஒரு நாள் பூமியில் இருந்து துடைத்தெறியப்படுவான் போல் இருக்கிறதே.

Fri Aug 31, 04:37:00 pm BST  
Anonymous Anonymous விளம்பியவை...

என்ன பயப்பிடுத்திறிங்களைப்பா.

Sat Sept 01, 12:24:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க