Saturday, August 11, 2007

நவீன வாழ்க்கை முறையும் புற்றுநோய் அதிகரிப்பும்.



நவீன வாழ்க்கை முறை நவ நாகரிகம்.. என்று உலகெங்கும் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலைத்தேய நாடுகளை விட கீழைத்தேய மக்களிடன் பாதுகாப்பான உணவுப் பழக்க வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. காலநிலைக்கு ஏற்ப அது அமைந்திருந்தது. மேலைத்தேய நாகரிக ஆதிக்கம் கீழைத்தேய மக்கள் மத்தியிலும் செல்வாக்குச் செய்து வரும் இன்றைய நிலையில் பிரித்தானிய ஆய்வு முடிவு ஒன்று உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய ஆய்வின் படி நவீன வாழ்க்கை முறைகளால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சில வகை புற்றுநோய்கள் அதிகளவில் அதிகரித்துள்ளன.

அளவுக்கு மிஞ்சிய உணவுப்பழக்கம்.. அற்ககோல் பாவனை அதிகரிப்பு.. சூரியக் குளியல் போன்றன முக்கியமான காரணிகளாக இனங்காட்டப்பட்டுள்ளன.

இவற்றால் பெண்கள் மத்தியில்..

1. அதிக உடல் நிறை அதிகரிப்பால்.. கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவது அதிகரித்துள்ளது.

ஆண்களில் இதே காரணத்தால் bowel புற்றுநோய் அதிகரித்துள்ளது. இவற்றுடன் இருபாலாரிடமும் சிறுநீரகப் புற்றுநோயும் அதிகரித்துள்ளது.

2. இவற்றைத் தவிர சூரிய குளிச்சலால் ஏற்படும் தோல் புற்றுநோய்கள் மற்றும் குடிப்பழக்கத்தால் புகைப்பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய்களில் வாய் புற்றுநோய்கள் அதிகரித்துள்ளன.

CHANGE IN CANCER RATES BETWEEN 1995 AND 2004

Cases of malignant melanoma rose from 5,783 to 8,939 - a 43% increase

Cases of mouth cancer rose from 3,696 to 4,769 - a 23% increase

Cases of womb cancer rose from 5,018 to 6,438 - a 21% increase

Cases of kidney cancer rose from 5,636 to 7,044 - a 14% increase

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 8:08 am

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

//அதிக உடல் நிறை அதிகரிப்பால்.. கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவது அதிகரித்துள்ளது.//
என்ன இது?

1. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவு.
2. சிகப்பு மாமிசத்துற்கும் குடல் புற்று நோய்க்கும் தொடர்பு இருக்கிறது.
3.பல ஆண்களின் உறவை நாடும் பெண்களுக்கு cervical cancer வரும் வாய்ப்பு அதிகம்.
4. HPV வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் வாய் வழி காமப் பழக்கங்களால் CANCER OF THE MOUTH வரும் வாய்ப்பு அதிகம்.

Sun Aug 12, 04:26:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

அநோனிமஸ்.. உங்கள் கருத்தும் சரியே. அதற்கு மேலதிகமாக நவீன வாழ்க்கை முறைகளால் ஏற்படும்.. உடல் நிறை அதிகரிப்புக்கும் புற்றுநோய் தாக்க அதிகரிப்புக்கும் உள்ள தொடர்பையும் குறித்த ஆய்வு தெளிவான ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

Sun Aug 12, 06:17:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க