Monday, September 03, 2007

மனிதனில் உயரத்தை தீர்மானிக்கும் ஒரு ஜீன் கண்டுபிடிப்பு.



மனிதர்கள் ஆளுக்காள் உயரத்தில் வேறுபடுகின்றனர். இந்த இயல்பைத் தீர்மானிப்பதில் பரம்பரை அலகுகள் என தமிழில் அழைக்கப்படும் ஜீன்களும் பங்கெடுக்கின்றன. இவை தாவரங்களில் நிரூபிக்கப்பட்டிருந்தன.

தற்போது மனிதனில் அவனின் உயரத்தை தீர்மானிக்கும் பரம்பரை அலகுகளில் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அது HMGA2 என்று குறியிடப்பட்டுள்ளது. குறித்த பரம்பரை அலகின் "உயரத்துக்கான" அலகைக் கொண்டிருப்பவர்கள்.. "குள்ளத்துக்கான" அலகைக் கொண்டிருப்பவர்களில் இருந்து 1 சென்ரிமீற்றர் அதிகம் உயரமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இன்னும் பல பரம்பரை அலகுகள் இது தொடர்பில் தங்கள் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய வாய்ப்புண்டு. எனினும் இது இன்னும் மர்மமாகவே உள்ளது. இவை குறித்த ஆய்வுகள் எதிர்காலத்தில் தொடர அதிகம் வாய்ப்புள்ளது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 2:45 pm

4 மறுமொழிகள்:

Blogger கோவி.கண்ணன் விளம்பியவை...

//மனிதனில் உயரத்தை தீர்மானிக்கும் ஒரு ஜீன் கண்டுபிடிப்பு.//

மனிதனில் உயர்வு/தாழ்வு பேதம் வளர்க்கும் ஜீன் கண்டுபிடித்து முற்றிலும் அழித்தால் இந்தியாவுக்கு நல்ல பலனாக இருக்கும்.
:(

Tue Sept 04, 04:08:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

அதற்கு ஜீன்களை அல்ல அழிக்க வேண்டியது. மனங்களில் விதைக்கப்பட்டுள்ள அல்லது மனங்களுள் பொக்கிசப்படுத்தப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுச் சிந்தனைகளை அழிக்கப்பட வேண்டும்.

முதலில்.. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பிரிவினை மூலம் மக்கள் மனதில் பேதத்தை விளைவிக்கும் ஜனநாயகத்தன்மையை மாற்றி அமைப்பதில் இருந்து டாக்டர் இஞ்சினியர் கூலி என்று தொழில்நிலை.. கல்விநிலை வைத்து மனிதர்களைப் பிரிப்பதில் இருந்து.. அனைத்தும் களையப்படும் போது.. நிச்சயம் இந்தியாவில் என்ன உலகில் மனிதரிடையே உயர்வு தாழ்வு வராது. காக்கை குருவி.. மீன் இறால்.. இவற்றுக்குள் அவை பேதமை காட்டுகின்றன. மனிதர்களைப் போல அவை பேதமை காட்டி இருந்தால் இன்று உலகில் உயிர்களுக்கே இடமிருந்திருக்காது. மனிதப் பேதமை.. உயிரழிவில் அல்லவா முடிகிறது.

உங்கள் ஆதங்கத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.

Tue Sept 04, 04:25:00 pm BST  
Blogger நளாயினி விளம்பியவை...

காய் குருவி இருக்கிறீங்களா..! குருவிகள் எப்ப மனிதராவது. சும்மா தான். குருவியாக இருப்பதே நல்லது. அது சரி நலம் தானே.

Fri Sept 14, 11:31:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

வாங்க நளாயினி அக்கா.. நீங்க எப்படி நலமா. நாங்க குருவிகள் தானே எப்பவும். உங்கள் வலைப்பதிவு படித்திருக்கிறேன். நன்றாக இருக்கிறது.

கருத்துச் சண்டையெல்லாம்.. உறவுச் சண்டை இல்லையே அக்கா.

நட்புடன் குருவிகள்.

Sun Sept 16, 09:34:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க