Monday, September 24, 2007

நித்திரை கூடினாலும் குறைந்தாலும் இதய நோயை அதிகரிக்கும்.




நமது உடலை ஆட்சி செய்யும் முக்கிய உறுப்பு மூளை. நித்திரையின் போதுதான் அது கொஞ்சம் என்றாலும் ஓய்வை எடுத்து உடற்செயற்பாடுகளை சீராக்கி வைக்கும் செயலை செய்ய தன்னை தயார் செய்கிறது.

இன்றைய உலகில் பணம் தான் வாழ்க்கையாகி விட்டது மனிதர்கள் மத்தியில். அதனால் இரவு பகலாக நித்திரை இன்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கின்றனர் பலர். ஆனால் சம்பாதிக்கும் பணத்தை அனுபவிக்க முன்னரே நோய் அவர்களைக் காவு கொண்டுவிடுகிறது. வாழ்வும் அர்த்தமற்றதாகி விடுகிறது.

அண்மையில் இரண்டு பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் இணைந்து செய்த ஆய்வில் இருந்து... 8 அல்லது 7 மணித்தியாலங்களில் இருந்து 5 மணித்தியாலங்களுக்கு அல்லது அதற்கும் குறைவான நேரத்துக்கு நித்திரை செய்பவர்கள் மத்தியிலும் 8 மணித்தியாலத்துக்கு அதிகமாக நித்திரை செய்பவர்கள் மத்தியிலும் கூடிய அளவு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்காக வாய்ப்பு சராசரியாக 8 மணித்தியாலங்கள் நித்திரை செய்பவர்களைக் காட்டினும் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர்.

ஆகவே தினமும் குறைந்தது 7 மணித்தியாலங்களாவது ஒரு மனிதன் நிம்மதியாக தூங்க வேண்டும் தனது 24 மணி நேர ஒரு நாள் வாழ்க்கையில்.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 12:08 pm

2 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

நித்திரை கூடினாலும் பிரச்சனை, குறைஞ்சாலும் பிரச்சனையா??! அப்ப இரவில ஓவர் ரைம் வேலை செய்யுறதை நிறுத்துவினமா, 24 மணி நேரம் கடைகளை திறக்கிறதை நிறுத்துவினமா??

Mon Sept 24, 09:30:00 pm BST  
Blogger HEMASRI விளம்பியவை...

good

Wed Oct 03, 01:15:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க