Tuesday, September 25, 2007

நாம் எங்கிருந்து வந்தோம்..?! - ஆய்வுத்தகவல்

முதலாவது காணொளி.


இறுதிக் காணொளி. (மொத்தம் 13 காணொளிகள். மிகுதியைக் காண கீழுள்ள இணைப்பை அணுகவும்)


ஆபிரிக்காவில் இருந்த ஒரு மனித இனக்குழுமத்தில் இருந்து 60-50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் உலகின் இதர பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமையை நிறுவும் மரபணு ஆய்வுகள்.

மனிதற்களிடையே பல தரப்பட்ட தோற்ற வேறுபாடுகள் காணப்படினும்.. அடிப்படையில் எல்லோரும் ஒரே இனக்குழுமத்தில் அமைந்த மூதாதையில் இருந்து வந்துள்ளனர்.

ஆபிரிக்கர்களும் வட இந்தியர்களும் தென்னிந்தியர்களுக்கும் அவுஸ்திரேலியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையில் பலவேறுபாடுகள் இன்று தோற்றமளவில் தெரியினும் மரபணு ரீதியில் எல்லோரும் ஒரே மூதாதையில் இருந்து பிறந்தவர்கள் தானாம்.

ஆனால் உலகில் மனிதன் செயற்கைத்தனமாக இயற்றியுள்ள பிரிவினைகள், குரோதங்கள் எத்தனை எத்தனை. வரலாறு என்று காலத்துக்குக் காலம் தவறாக திணிக்கப்பட்ட பதங்கள் ஆயிரம் ஆயிரம். வரலாறுகள் எனியாவது திருத்தப்படுமா...??! "திராவிடம்" "ஆரியம்" என்று சண்டைகள் தான் ஓயுமா...??! பொறுத்திருந்து பார்ப்போமாக.

உலகம் என்பது ஒரே தேசம் என்பதே.. எதிர்கால சந்ததிக்கான கொள்கையாக அமைய வேண்டும்.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 7:24 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

//உலகம் ஒரே தேசம்//

இதுதானே இப்ப குளோபலைசேசன் என்று சொல்லி பொருளாதார ரீதியா நடைபெறுகிறது.

என்னதான் சொன்னாலும் மனிதன் மனிதனை சுரண்டாமல், புறம்புகாட்டாமல் நடப்பான் என்று எதிர்பார்க்க இயலாது. சில விடயங்கள் புத்தக அளவில் தான் இருக்கும்.

Tue Sept 25, 11:05:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க