Tuesday, September 25, 2007

புவி வெப்பமடைதலுக்கு மனிதனின் செயற்பாடே காரணம்: பிபிசி ஆய்வில் தகவல்



புவி வெப்பமடைந்ததால் உருகும் துருவப் பனி

இதற்கிடையே, பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் கலந்து கொண்ட பெரும்பாலானோர், புவி வெப்பமடைதலுக்கு, ஒரு முக்கிய காரணியாகக மனிதனின் செயற்பாடே இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

21 நாடுகளை சேர்ந்த 22,000 பேர் கலந்துகொண்ட இந்த ஆய்வில் கலந்து கொண்ட 79 வீதமானோர், தொழிற்துறைச் செயற்பாடு மற்றும் போக்குவரத்து உட்பட மனித செயற்பாடே புவி வெப்பமடைவதற்கு மிக முக்கிய காரணியாகும் என்று கருத்துக் கூறியுள்ளார்கள்.

காலநிலை மாற்றம் தொடர்பில் ஒரு புதிய சிந்தனை தேவை என்பதற்கு இந்த ஆய்வு ஒரு சான்று பகர்கிறது என்று கூறுகிறார், பிபிசிக்காக இந்த ஆய்வை நடத்திய, நிறுவனங்களில் ஒன்றான குளோப்ஸ்கான் நிறுவனத்தின் தலைவரான டாக் மில்லர்.

புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான நடவடிக்கை தேவை என்று இந்த ஆய்வில் கலந்து கொண்ட பெரும்பான்மையானோர் கூறியுள்ளனர்.

புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், வளரும் நாடுகளையும் உள்ளடக்கிய வகையில், சர்வதேச ஒப்பந்தம் ஒன்று தேவை என்பதற்கு 73 வீதமானவர்கள் ஆதரவு தந்துள்ளனர்.

நன்றி- பிபிசி தமிழ்.

மேலதிக செய்திகளுடன் பிபிசி தமிழை நாட இங்கு அழுத்தவும்.

பதிந்தது <-குருவிகள்-> at 10:31 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க