Thursday, September 27, 2007

விண்வெளியில் நாசாவின் புதிய ஓடம் செலுத்தப்பட்டது


நாசா செலுத்தியுள்ள புதிய ஓடம் டெல்ரா உந்துகணை மூலம் செலுத்தப்படும் காட்சி.

செவ்வாய் கிரகமும், வியாழன் கிரகமும் சுற்றிவரும் பாதைகளுக்கு இடையே இருக்கின்ற பகுதியில் உள்ள விண்கற்களின் தொகுதிக்கு முதற்தடவையாக விஜயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும், ஒரு விண் ஓடத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஏவியுள்ளது.

அப்பகுதியில் காணப்படும், சிறிய கிரகங்களாக மீள் வகைப்படுத்துள்ள இரு மிகப்பெரிய பொருட்களான வெஸ்டா மற்றும் செரஸ் ஆகிய இரண்டில், ஒன்றுக்கு அருகில் இந்த டாவ்ண் என்ற விண்கலம் செல்லும். அதற்காக இது 8 ஆண்டுகள் பயணிக்கும்.

இந்த விண்கற்கள் தமக்கு சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்த புதிய உட்தகவல்களைத் தரலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ஒரு மரபுசார் ராக்கட்டின் உதவியுடன் பூமியை விட்டுச் செல்லும் இந்த டாவ்ண் விண்கலம், அந்த விண்கற்களை அடைய 4 வருடங்களை எடுக்கும்.

மின்சாரத்தால் சக்தியேற்றப்பட்ட நுண் பொருட்களின் மூலம் உஞற்றப்படுகின்ற ஐயோண் டிரைவ் இயந்திரத்தின் மூலம், இந்த விண்கலத்துக்கான சக்தி வழங்கப்படுகிறது

தமிழ் செய்தி வடிவம்: பிபிசி தமிழ்



மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 11:40 pm

4 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

ஏன் ஈர்ப்பு விசை மூலம் தான் ஓடம் செலுத்தப்பட வேண்டுமா?
என்ன நன்மை?
இது என்னவோ தலையை சுற்றி காதை தொடுவது போல் உள்ளது.

Fri Sept 28, 01:27:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

பூமியின் ஈர்ப்பு எல்லையைத் தாண்டும் வரை அதுதான் சாத்தியமானதாக உள்ளது. பூமியின் ஈர்ப்பு எல்லையைத் தாண்டிய பின்னர்.. ஈர்ப்பின் கட்டுப்பாட்டுக்குள் செயற்பட வேண்டிய தேவைகள் இருப்பதில்லை. இப்படி ஒவ்வொரு கோளுக்கும்.. விண்பொருளுக்கும் என்று ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்யும்.

நீங்கள் என்ன வினவுகிறீர்கள் என்று கொஞ்சம் தெளிவாக சொல்வீர்கள் என்றால் என்னால் இயன்ற அளவுக்கு விளக்க முடியும்.

உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

Sun Sept 30, 08:38:00 pm BST  
Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

"mars gravity assist" மூலம் வட்டப்பாதையில் செல்ல வேண்டியதின் அவசியம் என்ன?
ராக்கெட் பூஸ்டர் மூலம் குறைந்த தூரத்தை கடக்க முடியாதா?
அதாவது நேரடியாக இந்த இடத்தை அடைய முடியாதா?
பி.குறிப்பு: நான் வானசாஸ்திரம் படிக்கவில்லை,பார்க்கும்/படிக்கும் செய்திகளின் என்னுள் எழும் "ஏன்?" என்ற கேள்விகளுக்கு விடை காண முயல்கிறேன்.
முடிந்தால் விளக்குங்கள்.

Mon Oct 01, 07:33:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

வேகக் கட்டுப்பாடு மற்றும் காலம் என்பன குறித்து இந்த நிகழ்வு செய்யப்படுகிறது என்று நினைக்கிறேன்.

Mon Oct 01, 12:11:00 pm BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க