Sunday, September 30, 2007

எனித் தவளைகளை வெட்டிக் கிழிக்கத் தேவையில்லை.



உயிரியல் படிப்பவர்கள் தவளைகளை வெட்டி, அங்கங்களின் தொகுதிகளின் தொழிற்பாடுகள்.. மற்றும் அமைவிடங்களைப் பற்றி அறிவார்கள்.. ஆராய்வார்கள். இதற்காக ஆண்டு தோறும் பல ஆயிரம் தவளைகள் உலகெங்கும் வெட்டிக் கொல்லப்படுகின்றன.

ஆனால் ஜப்பானிய கிரோசிமா பல்கலைக்கழக உயிரியல் தொழில்நுட்ப விஞ்ஞானிகளோ இதற்கு முடிவுகட்டும் வகையில் இனக்கலப்பின் மூலமான மரபணுத் தெரிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒளிபுக விடக் கூடிய தோலைக் கொண்ட தவளைகளை உருவாக்கியுள்ளனர். இந்தத் தோலின் ஊடாக தவளைகளின் உடலின் உள்ளக அங்கங்களை வெளியில் இருந்தே பார்க்க முடியும் படிக்க முடியும்.

இதேபோன்று மனிதரிலும் செய்ய முடியுமா என்றால்.. அது கொஞ்சம் சிக்கலானது. பாலூட்டிகளில் தோலின் தன்மையை தீர்மானிக்கும் மரபணுக்கள் கொஞ்சம் சிக்கல் தன்மை வாய்ந்தவை.

மேலதிக தகவல் இந்த இணைப்பில் உள்ள காணொளியில் உண்டு.

பதிந்தது <-குருவிகள்-> at 8:14 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க