Sunday, September 30, 2007

மூளையைத் தின்று ஆளைக் கொல்லும் அமீபா.



படத்தில் அப்புக்குறி..பக்ரீரியாவை அமீபா உண்ணும் காட்சியைக் குறிக்கிறது. இப்படித்தான் மூளைக் கலங்களையும் அமீபா உண்ணும்.

அமீபா (Amoeba) என்பது Phylum:Protozoa வுக்குள் அடங்கும் ஓர் நுண்ணுயிரி. இது வழமையாக நன்னீர் நீர்நிலைகளில் காணப்படும். ஆனால் Naegleria fowleri எனும் அமீபா இனம் உலகில் அமெரிக்கா உட்பட சூடான பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகளில் மற்றும் மண்ணில் காணப்படுவதுடன் அவை மூக்குத் துவாரத்தின் மூலம் தொற்றலடைந்து மனித மூளையைத் தாக்கி அழித்து அதை உண்பதன் மூலம் உயிர் வாழ விளைவதால் மனிதன் மரணமடைய நேரிடுகிறது. அமெரிக்காவில் மட்டும் கடந்த 1995 இல் இருந்து 2004 ஆண்டு வரையான காலத்தில் மொத்தம் 23 பேர் வரை இந்த அமீபாவின் தொற்றலுக்கு இலக்காகி மூளை அழிந்து இறந்துள்ளனர்.

இந்த அமீபாக்கள் சூடான நீர்நிலைகள் மட்டுமன்றி.. சுகாதாரமற்ற நீச்சல் தடாகங்களிலும் காணப்படுகின்றன என்பதும் அங்கிருந்தும் மனிதர்களை தொற்றக் கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இந்த அமீபாக்கள் நீர்நிலைகளின் அடிப்பகுதியில் வாழுகின்ற போதிலும்.. ஆழம் குறைந்த நீர்நிலைகளில் நீந்தும் போது இவை தொற்றக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாம். இருந்தாலும் இந்த அமீபாவின் தொற்றல் வீதம் மிக அரிது என்பதால் இந்த அமீபா குறித்து மக்கள் பெரிதும் அஞ்சத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

"Though infections tend to be found in southern states, Naegleria has been found almost everywhere in lakes, hot springs, even some swimming pools"

இந்த அமீபத்தாக்கத்தின் ஆரம்ப அறிகுறியாக கழுத்துப் பிடிப்பு தலையிடி மற்றும் காய்ச்சல் என்பன இருக்கின்றன.

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 9:07 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க