Wednesday, October 10, 2007

பெளதீகத்துக்கான நோபல் பரிசு - 2007



நோபல் பரிசுக்குரிய பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி Albert Fert

இயற்பியல் அல்லது பெளதீகவியல் என்று அழைக்கப்படும் physics க்கான இவ்வாண்டு நோபல் பரிசு, ஐபொட் (ipod) மற்றும் கணணியில் பாவிக்கப்படும் Hard-disk போன்றவற்றில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை புதிய தொழில்நுட்பமான (giant magnetoresistance, or GMR)மூலம் உருவாக்கப்பட்ட உணரிகள் (sensors) கொண்ட வாசிப்பு உபகரணங்கள் (computer hard-disk reader) மூலம் விரைவாக வாசித்தறிய முடியும் என்பதை கண்டறிந்ததற்காக ஒரு பிரான்ஸ் விஞ்ஞானிக்கும் ஒரு ஜேர்மனிய விஞ்ஞானிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தில் "the phenomenon of "giant magnetoresistance", in which weak magnetic changes give rise to big differences in electrical resistance" என்ற இயல்பு கண்டறியப்பட்டு பாவிக்கப்படுகிறது. அது கணணியில் மற்றும் ஐபொட் போன்ற இலத்திரனியல் உபகரணங்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகளை விரைந்து வாசிக்கவும் அவற்றின் தரவுச் சேமிப்பு வினைத்திறனை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த புதிய தொழில்நுட்பம் 1980களில் கண்டுபிடிக்கப்பட்டு பாவிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பரிசு பெறுவோர் விரபம்..

French scientist Albert Fert மற்றும் Peter Grunberg of Germany.

மேலதிக விபரங்கள் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 10:24 am

2 மறுமொழிகள்:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) விளம்பியவை...

நானும் ஒரு பதிவு போட்டேன். தங்கள் பதிவு கண்டுபிடிப்பு பற்றிய மேலதிக விபரம் தருகிறது.

Wed Oct 10, 10:47:00 pm BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி யோகன். உங்கள் பங்களிப்புக்கு. தொடர்ந்து பதிவுகளைத் தாருங்கள். நாம் வேளை கிடைக்கும் போதெல்லாம் பதிகின்றோம்.

Thu Oct 11, 01:42:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க