Saturday, October 13, 2007

உலகில் மீண்டும் முளைவிடும் அதியுயர் தொழில்நுட்ப ஆயுதப் போட்டி.



அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தின் செயற்பாட்டு மாதிரி வடிவம். கீழுள்ள இணைப்பில் முழு விபரங்களைக் காணலாம்.

மூன்றாம் உலகப் போர் தொடங்காததற்கு முக்கிய காரணம் உலகின் முக்கிய வல்லரசுகளின் ஆயுதச் சமநிலை என்றால் அது மிகையல்ல.

தற்போது அமெரிக்கா தன் மண்ணிலும் அதன் நேச நாடுகளின் மண்ணிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள ஏவுகணை எதிர்ப்பு கவசத்திட்டம் உலகின் ஆயுத சமநிலையைக் குழப்பி.. அமெரிக்காவின் பக்கம் அதி நவீன தொழில்நுட்பத்தின் வாயிலான ஆயுத மேலாதிக்கத்தை நிறுவி, அது தனது இராணுவ பலத்தை உலகில் ஓங்கச் செய்து விடுமோ என்ற அச்ச நிலை தோன்றியுள்ளது.

அமெரிக்கா, ஈரான் மற்றும் வடகொரியாவின் ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்புப் பெற என்று வெளியில் சொல்லிக் கொண்டு இராணுவ ரீதியில் அதற்கு சவாலாக விளங்கும் ரஷ்சியாவின் பலஸ்ரிக் ஏவுகணைகளில் இருந்து தன்னையும் தனது நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள நேசநாடுகளையும் (சமீபத்தில் நேட்டோவில் இணைந்த முன்னாள் சோவியத் கூட்டாளிகளையும்)பாதுகாக்கும் நோக்கோடு மேற்குறிப்பிட்ட ஏவுகணை தடுப்புத் தொழில்நுட்பத்தை ரஷ்சிய எல்லை வரை பரவலாக்கம் செய்து வருகிறது.

இதை ரஷ்சியா கண்டித்திருப்பதுடன் இது விவகாரமாக அமெரிக்காவோடு பேச்சில் ஈடுபட்ட போதும் உடன்பாடுகள் எதுவும் எட்டப்பட முடியவில்லை.

இதனால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவோடு செய்து கொள்ளப்பட்ட அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் உட்பட முக்கியமான ஒப்பந்தங்களில் இருந்து தான் விலக நேரிடலாம் என்று ரஷ்சியா எச்சரித்துள்ளதுடன் அமெரிக்க ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தை சமாளிக்கும் வழிவகைகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறதாம்.

அமெரிக்க ஏவுகணை எதிர்ப்புத் திட்டத்தின் செயற்பாட்டு மாதிரி விளக்கம்.

இந்தச் செய்தி தொடர்பான மேலதிக செய்தி இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 12:17 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க