Thursday, October 18, 2007

கருத்தடைக்கு புதிய வழி தேடி..!



தற்போதெல்லாம் பெண்கள் குழந்தை உருவாகாமல் உடல் உறவு கொள்ள இரசாயன மருந்துகளைப் (கருத்தடை மாத்திரைகள்) பாவித்து வருகின்றனர். அதனால் பல பின் விளைவுகள் (தலையிடி,மயக்கம், வாந்தி, பாலுறவு நாட்டக் குறைவு.. இப்படியும் இன்னமும்) ஏற்படுகின்றன.

இவற்றைத் தடுக்கும் நோக்கில் அதி நவீன மரபணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறித்த ஒரு பிறப்புரிமையியல் அலகை (gene) ஓய்வடையச் செய்து முட்டையும் விந்தும் கலப்படைவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.

எலிகளின் முட்டையில் காணப்பட்ட ZP3 எனும் முட்டை (பெண் புணரிக்கலம்) விந்தோடு (ஆண் புணரிக்கலம்) இணைய உதவும் புரதத்தை உருவாக்கும் மரபணு அலகை (ஜீன்) "RNA interference" மூலம் தற்காலிகமாக ஓய்வுக்குக் கொண்டு வந்து முட்டையோடு விந்து சேர்வதைத் தடுத்துள்ளனர் விஞ்ஞானிகள். இது பக்க விளைவுகள் அற்ற நல்ல வழிமுறையாக நோக்கப்படுகிறது.

மனிதரிலும் இது சாத்தியமாக்கப்படும் போது கருத்தடை மாத்திரைகளுக்குப் பதிலாக பெண்கள் இந்த முறைகளைப் பாவிக்கையில் பக்க விளைவுகளின் தாக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும். புதிசா ஏதேனும் பிரச்சனைகள் எழுமா என்பதை ஆய்வின் முடிவுதான் தீர்மானிக்கனும்.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 9:12 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

நல்ல செய்தி.

கருத்தடை மாத்திரைகள் பாவிப்பதால் மார்பகப் புற்றுநோய் மற்றும் உடல்பருமன் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கிறதாமே?

Fri Oct 19, 05:40:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க