Wednesday, October 31, 2007

ஒல்லியாக இருந்தால் புற்றுநோய் வருவதைக் குறைக்கலாம்.



அதிக கொழுப்பு படிவினால் உடற்பருமன் அதிகரிக்காத வகையில் உங்களைக் கவனிப்பீர்கள் என்றால் சில வகைப் புற்றுநோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு உங்களைப் பாதுகாக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வொன்று குறிப்பிடுகிறது.

இதன்படி உங்கள் உடற் திணிவுச் சுட்டெண் (Body Mass Index (BMI) 18.5 தொடங்கி 25 க்குள் அடங்கி இருக்க வேண்டும். உடற் திணிவுச் சுட்டெண் உங்களின் உயரம் மற்றும் நிறைக்கு இடையிலான விகிதத்தின் வழியில் பெறப்படுகிறது.

உங்களின் உடற் திணிவுச் சுட்டெண்ணை உடனடியாகவே கணிப்பிட இங்கு அழுத்துங்கள்.

உடற்கொழுப்பின் அளவு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

மேலும் கீழ் குறிப்பிடும் வகையில் உங்கள் உணவுப்பழக்கம் அமையின் உடற் திணிவுச் சுட்டெண்ணை ஒரு எல்லைக்குள் வைத்திருப்பதுடன் பெருங்குடல்,மார்பகப் புற்றுநோய் மற்றும் இவை சார்ந்த புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

சிவப்புற நிற மாமிச உணவுகளைக் கட்டுப்படுத்தல் (மாட்டிறைச்சி போன்றவை) - Limit red meat (இவ்வகை உணவுகளில் 500 கிராம் ஒரு வாரத்துக்கு உண்ணலாம்)

உள்ளெடுக்கும் மதுபானத்தைக் கட்டுப்படுத்தல் - Limit alcohol

பன்றி ஆடு மற்றும் பிற மாமிச விலங்கிறைச்சி உணவுகளைத் தவிர்த்தல் - Avoid bacon, ham, and other processed meats

சீனியூட்டப்படாத மென்பானங்களை அருந்துதலை வழக்கப்படுத்தல் - No sugary drinks

உடற்திணிவுச் சுட்டெண்ணை 21 க்கு மேற்பட்டுச் செல்லாமல் வைத்திருத்தல் - No weight gain after 21

தினமும் உடற்பயிற்சி செய்தல் - Exercise every day

குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டல் - Breast feed children

உணவுக்கட்டுப்பாட்டு பிரதியீடுகளை (மாத்திரைகள்) எடுத்தலைத் தவிர்த்தல் - Do not take dietary supplements to cut cancer


மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 1:36 pm

1 மறுமொழிகள்:

Blogger hosuronline.com விளம்பியவை...

குண்டாக இருந்தால் எடையை குறைக்கலாமே?
By: http://hosuronline.com

Wed Oct 31, 07:15:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க