Wednesday, October 17, 2007

தென் ஆபிரிக்க எய்ட்ஸ் நிலவரம் குறித்து யூனிசெப் எச்சரிக்கை..!



எய்ட்ஸ் தொற்றிய தென் ஆபிரிக்கக் குழந்தை ஒன்று

தென் ஆப்ரிக்காவில், எய்ட்ஸ் நோய் தொற்றி இறப்போரின் எண்ணிக்கை, அந்த நோய் தொற்றி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், எய்ட்சுக்கு எதிரான போரில் தென் ஆப்ரிக்கா தோற்று வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சிறார்கள் நிதியம், யூனிசெப் கூறுகிறது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் மரணம், அவர்களின் குழந்தைகளின் மனங்களில் விளைவிக்கும் கடுமையான தாக்கம், எதிர்காலம் குறித்த ஒரு பயங்கரமான செய்தியை அனுப்புவதாக யுனிசெப்பின் தென் ஆப்ரிக்கப் பிரதிநிதி மச்சாரியா கமாவ் எச்சரித்தார்.

தற்போதைய போக்கு நீடித்தால், 2015ம் ஆண்டு வாக்கில், தென் ஆப்ரிக்காவில், 50 லட்சம் அனாதைகள் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

bbc.tamil

பதிந்தது <-குருவிகள்-> at 11:01 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க