Monday, October 22, 2007

கடலில் கரையும் காபனீரொக்சைட்டின் அளவு குறைவடைகிறது - பூமி வெப்பமுறுதல் தீவிரமாகும் அபாயம்.



உலக வெப்பமுறுதலின் விளைவால் பனிப்பாறைகள் விரைவாக உருகி வருகின்றன. கடல்மட்டமும் உயர்கிறது. இருந்தும்..

பூமியின் வளிமண்டலத்திற்குள் மனிதர்களின் செயற்பாட்டால் விடுவிக்கப்படும் காபனீரொக்சைட் (CO2) வாயுவில் சுமார் 50% கடல் நீரில் கரைந்தும் தாவரங்களூடு காபன் சார் உயிர்த்திணிவாகவும் (Biomass) மாற்றப்பட்டு வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படுவதே இயற்கையில் இந்த வாயு வளிமண்டலத்தில் ஒரு சமநிலையில் இருக்கக் காரணமாகும்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாகச் செய்யப்பட்ட ஆய்வில் இருந்து சமுத்திர நீரில் கரையும் காபனீரொக்சைட்டின் அளவு சரி பாதியாகக் குறைவடைந்திருப்பதுடன் கடல் நீரும் இவ்வாயுக்கு நிரம்பல் தன்மையைக் காண்பிக்கிறதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது இயற்கையின் மாற்றங்களினால் நேர்ந்த ஒரு நிலையா அல்லது காலநிலை மாற்றத்தின் விளைவா என்பதை உடனடியாக விளக்க முடியாது விடினும்.. இந்த நிலை நீடிப்பின் உலக வெப்ப முறுதல் என்பது விரைவுபடக் கூடிய வாய்ப்பே அதிகம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

காபனீரொக்சைட் வாயுவே சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர்களை உறிஞ்சி வைத்திருப்பதில் முக்கிய பங்களிக்கிறது. அதன் அளவு வளிமண்டலத்தில் கூடும் போது பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலையும் அதிகரிக்கும்.

மேலதிக தகவல் இங்கு - இணைப்பு 1

மேலதிக தகவல் இங்கு - இணைப்பு 2

பதிந்தது <-குருவிகள்-> at 10:09 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க