Wednesday, November 07, 2007

உடற்பருமன் அதிகரிப்பு பெண்களில் மார்பகப் புற்றுநோய் தோன்றுதலைத் தூண்டுகிறது.



சமீப ஆண்டுகளாக 50 - 64 வயதுக்கு உட்பட்ட பெண்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அதிக உடற்பருமனும் அதிக உடல்நிறையும் மார்பகம் மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய் மாதவிடாய் நின்றதன் பின்னும் பெருங்குடல் சார்ந்த புற்றுநோய் மாதவிடாய் நிற்பதற்கு முன்னரும் உடற்பருமன் கூடிய அல்லது உடல் நிறை கூடிய பெண்களில் அதிக அளவில் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கருப்பைப் புற்றுநோய், களப் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய், என்பு மச்சைப் புற்றுநோய் என்று பல வகை புற்றுநோய்களுக்கும் உடற்பருமன் அதிகரிப்புக்கும் இடையில் உள்ள தொடர்பும் கண்டறியப்பட்டுள்ளது.

CANCERS LINKED TO OBESITY

Womb
Oesophagus
Bowel
Kidney
Leukaemia
Breast
Multiple myeloma (bone marrow)
Pancreatic
Non-Hodgkin's lymphoma
Ovarian

எனவே இந்த ஆபத்தில் இருந்து தப்புவதற்கு பெண்கள் உடலாரோக்கியமிக்க உணவுப்பழக்க வழக்கங்களுக்கு தம்மை குறித்த வயதுகளில் பேணிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உடற் பருமன் அதிகரிப்பு மற்றும் உடல்நிறை அதிகரிப்பு என்பன பாதகமான காரணியாகவே உள்ளது. ஏலவே முன்னொரு பதிவில் இது குறித்த தகவல் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 8:03 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க