Monday, November 19, 2007

போதையூட்டப் பாவிக்கப்படும் செடியில் உள்ள ஒரு இரசாயனம் புற்றுநோய்க்கு மருந்தாகிறது.



போதை தர என்று உலகில் பாவிக்கப்பட்டு வரும் தடைசெய்யப்பட்ட கனாபிஸ் (Cannabis) எனப்படும் மூலிகைச் செடியில் இருந்து பிரித்தெடுக்கப்படவல்ல ஒரு இரசாயனக் கூறு (cannabidiol or CBD) மார்பகப் புற்றுநோய்க் கலங்கள் பல்கிப் பெருகி பிற இடங்களுக்கும் பரவாமல் தடுக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கனாபிஸ் போதைப் பொருள் தயாரிக்கப் பயன்படினும், அதில் உள்ள ஒரு இரசாயனக் கூறுக்கே புற்றுநோயைக் கட்டுப்படுத்தக் கூடிய இயல்பிருப்பதால் கனாபிஸில் இருந்து குறித்த இரசாயனத்தைப் பிரித்தெடுத்து புற்றுநோய்க்கு இரசாயனச் சிகிச்சை அளிக்கப் பாவிப்பது போதையூட்டுதல் போன்ற ஒரு சட்டவிரோதச் செயல் அல்ல என்பதால் இந்த இரசாயனம் எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிய வருகிறது.

அண்மையில் இந்திய கேரள மாநிலத்தில் இருந்து வந்த ஒரு செய்தியிலும் இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள் கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்று கருத்துரைத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மூலிகை மருத்துவம் பக்க விளைவுகள் குறைந்த இயற்கை தன்மை சார்ந்த மருத்துவ முறையாக விளங்குவதால் இவற்றால் உடலுக்கு ஏற்படும் ஆபத்தும் குறைவானதாக அமைகிறது.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 10:31 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க