Saturday, November 24, 2007

மனிதனை விடப் பெரிய தேள் கண்டுபிடிப்பு.மனிதனை விடப் பெரிய தேள். ஒப்பீட்டுடன் கூடிய படம்.

மனிதனை விட அளவில் பெரிய கடல் வாழ் தேள் (scorpion) ஓன்றின் சுவட்டி நிலைப் பாகம் ஜேர்மனியில் கண்டறியப்பட்டுள்ளது. இது டைனோசோர்களின் காலத்துக்கு முன்னர், இன்றிருந்து சுமார் 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

கணம் ஆத்திரப்போடாவில் (Phylum Arthropoda) அடங்கும் உயிரினங்களில் இதுவரை கண்டறியப்பட்டவற்றில் இந்த ஆதிகால தேளே பெரியதானதாக கணிக்கப்பட்டுள்ளது.

இவை இவ்வாறு உடற்புறத்தே அமைந்த துண்டுபட்ட பெரிய வன்கூட்டுடன் அமைந்திருக்க ஆதிகாலத்தில் வளிமண்டலத்தில் அதிக ஒக்சிசன் இருந்திருக்கலாம் அல்லது இவற்றுக்கான இரைகளுடனான போட்டியைச் சமாளிக்க இவ்வாறு அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேலதிக தகவல் ஆங்கிலத்தில் கீழே..

----------

LONDON (Reuters) - Scientists have found the fossilized claw of a 2.5-metre (8-foot) sea scorpion, a nightmarish creature living before the age of dinosaurs.

The discovery of the 390-million-year-old specimen in a German quarry suggests prehistoric spiders, insects and crabs were much larger than previously thought, researchers at Britain's Bristol University said on Wednesday.

"This is an amazing discovery," said university researcher Simon Braddy.

"We have known for some time that the fossil record yields monster millipedes, super-sized scorpions, colossal cockroaches, and jumbo dragonflies but we never realized, until now, just how big some of these ancient creepy-crawlies were."

The find was described by Braddy and colleagues in the journal Biology Letters.

The claw of the sea scorpion Jaekelopterus rhenaniae measured 46 centimeters (18 inches) long, indicating the creature was half a meter longer than previous estimates of the ancient arthropods.

Just why prehistoric arthropods -- creatures with external skeletons and segmented bodies -- grew so large is unclear. Some scientists believe they may have become giants because of the higher levels of oxygen in the atmosphere in the past.

Another theory is that they evolved in an "arms race" alongside their likely prey, the early armored fish.

(Reporting by Ben Hirschler; editing by Robert Woodward)

மேலும் ஒரு இணைப்பு. இதே செய்தி தொடர்பானது.

பதிந்தது <-குருவிகள்-> at 9:33 pm

7 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

மனிதன் வருவதற்கு முன்பு பல பேர் அரசான்டு இருக்கிறார்கள் போலும்.
அப்புறம் ஒன்று..
உங்கள் வலைப்பக்கம் அழகாக அமைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
வெண்புலத்தில் சிகப்பு எழுத்துருக்கள் தான் அவ்வளவாக எடுபடவில்லை.

Sat Nov 24, 11:42:00 pm GMT  
Anonymous Anonymous விளம்பியவை...

http://sirippu.wordpress.com/2007/11/22/scorpian/

Sun Nov 25, 01:31:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நன்றி வடுவூர் குமார். மனிதன் வந்து சுமார் 0.5 மில்லியன் ஆண்டுகள் தானே ஆகுது. அதுக்குள்ளேயே பூமியை அழிச்சிடுவாங்க போல..??! அவனுக்கு முன்னர் அரசாண்டவங்க மனிதனுக்கு வழிவிட்டிட்டுப் போனாங்க. ஆனா இவங்க யாருக்கும் வாழ வழிவிடமாட்டாங்க தாங்களும் வாழ மாட்டாங்க போல இருக்கே.. செயற்பாடுகள்.

வலைப்பூ பற்றிய கருத்துக்கு நன்றிகள். சிவப்பு எழுத்துருவை மிக குறைந்த அளவில் தான் பாவித்திருக்கிறேன். அதுவும் முக்கியமா வாசகர்களை நோக்கி சிலவற்றைக் குறிப்பிட..! வேறேதேனும் வர்ணம் அதற்குப் பிரதியீடாக அமையின் தயவுசெய்து குறிப்பிடுங்கள். மாற்றி அமைக்கின்றோம்.

Sun Nov 25, 08:07:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

அனானிமஸ் உங்கள் இணைப்பையும் செய்திக்கான மேலதிக இணைப்புக்களுடன் பட்டியலிட்டுள்ளேன்.

நன்றிகள்.

Sun Nov 25, 08:14:00 am GMT  
Blogger OSAI Chella விளம்பியவை...

naan thavaraamal padikkum valaipookkalil kuruvkalum onru. arumaiyaana ariviyal thamil valarkkum paNi! vaazhthukkal nanbare! seekiram enathu valaiththaLaththil link kodukka aasai. thodaratum ungak sevai.


anbudan
osai chella

Sun Nov 25, 05:47:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

நண்பர்களே இந்த வலைப்பதிவை நான் 2003 இல் இருந்து ஆரம்பித்து செய்த காலம் தொட்டு உங்கள் அனைவரினதும் உற்சாகம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பல சிரமங்கள் மத்தியிலும் நான் என்னால் இயன்ற முயற்சியை விடாமல் இவ்வலைப்பதிவை பரிகரிக்க செய்து வருகின்றேன். உங்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப எனது பணி நிச்சயம் தாய் தமிழுக்காகத் தொடரும்.

நன்றி நண்பர்களே நண்பிகளே. தொடர்ந்தும் உங்கள் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் பங்களிப்பாகச் செய்யுங்கள்..!

என்றும் நட்புடன்
உங்கள் குருவிகள்.

Sun Nov 25, 10:17:00 pm GMT  
Blogger சீனு விளம்பியவை...

நானும் படித்திருக்கிறேன். சிறுவயதில் ஒரு காமிக் படித்தேன். அதில் ஒரு குருவி தான் ஹீரோ(யின்?). அங்கு எல்லாமே ராட்சத வடிவில் இருக்கும். மனிதனெறும்பை போல இருப்பான். கடைசியில் அந்த குருவி இறந்ததும் 2-3 நாட்களுக்கு சாப்பாடு இறங்க வில்லை...

Mon Nov 26, 11:04:00 am GMT  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க