Monday, November 26, 2007

பசியோடு இருந்தல் வாழ்க்கைக் காலத்தை நீடிக்கிறது..?!



பரிசோதனைக்கு உள்ளான சிறிய வட்டப்புழுக்கள்.

நோய்களைத் தீர்க்க என்று செயற்கையான வகையில் பெறப்பட்ட இரசாயன மருந்துகளை உட்கொள்கின்றோம் இல்லையா..! அப்படி உட்கொள்ளும் மருந்துகளில் ஒன்று மனிதனின் குடலில் ஒட்டுண்ணியாக வாழக் கூடிய சிறிய வட்டப் புழுக்கள் சிலவற்றின் ஆயுட்காலத்தை 30% தால் அதிகரிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக உயர் மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கு அதில் இருந்து விடுபட என்று வழங்கப்படும் மருந்து ஒன்றில் உள்ள இரசாயனமானது இவ்வாறு சிறிய வட்டப்புழுக்கள் (nematode worms)சிலவற்றின் வாழ்க்கைக் காலத்தை அதிகரிப்பதானது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் இவை எவ்வாறு இந்த வாழ்க்கைக் கால நீடிப்பைப் பெறுகின்றன என்பதையிட்டும் ஆய்வுகள் செய்ய உள்ளனர்.

குறித்த வகை மருந்துகளின் இரசாயனங்கள் ஓர் உயிரியின் வயதாதல் மரபணுக்களின் செயற்பாடுகளில் செல்வாக்குச் செய்து இவ்வாறு வாழ்க்கைக் காலத்தை அதிகரிக்கின்றனவா அல்லது புழுக்களின் மூளையில் அவற்றுக்கான உணவு சம்பந்தப்பட்ட போலியான பசித்தூண்டல்களை வழங்கி அவற்றின் வாழ்க்கைக் காலத்தை அதிகரிக்கின்ற வகையில் செயற்படுகின்றனவா, என்பனவற்றையிட்டு விஞ்ஞானிகள் கவனம் செலுத்த உள்ளனர்.

பொதுவாக உடலுக்குத் தேவையான கலோரி (சக்தி) அளவுக்கு அதிகமாக அன்றி, உடலின் குறைந்த அளவு தேவையையே பூர்த்தியை செய்யக் கூடிய வகையில் குறைவாகக் கிடைக்கின்ற போது வாழ்க்கைக் காலம் என்பது அதிகரிக்கின்றது என்ற விஞ்ஞானிகளின் கருதுகோளுடன் இந்த நிகழ்வு சம்பத்தப்பட்டிருக்கிறதா என்ற வினவலும் விஞ்ஞானிகள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

எதுஎப்படியோ இந்த அவதானிப்புக்கு விஞ்ஞான ரீதியான விடை கிடைக்கும் போது மனிதனின் ஆயுளையும் கூட்ட ஏதேனும் வழி பிறக்கலாம் இல்லையா..??! முயற்சி திருவினையாக்கட்டும்.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 4:46 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க