Monday, November 26, 2007

நத்தார் இசை ஒலிக்கும் யானைகள்.



என்ன மனிதர்கள் எமக்குத்தான் இசை மீட்டுவதில் நாட்டம் என்று நினைக்கிறீர்களா.. அதுதானே ஆகாது என்கிறது. எம்மைப் போலவே இசை ரசனையோடு நத்தார் இசை மீட்கிறார் யானையார்.

ஜுங்கில் பெல் ('Jingle Bells') நத்தார் இசை உலகப் பிரசித்தமானது. அதை மனிதர்கள் மட்டுமா இசைக்க முடியும் ஏன் நம்மால் முடியாது என்று எண்ணிய யானைகள்.. மனிதர்களிடம் பயிற்சி எடுத்த பின்னர் அந்த இசையை இசைக்கின்றன. இது ஜப்பானில் நிகழ்ந்துள்ளது.

டொல்பின்கள் போல யானைகளும் புத்திகூர்மையானவை..!

கீழுள்ள இணைப்பில் உள்ள காணொளியில் யானைகள் இசை மீட்கும் காட்சிகளைக் காணலாம்.

காணொளி இங்கு.

இது இப்படி இருக்க தாய்லாந்தில் ஆண்டு தோறும் நடக்கும் குரங்குகளுக்கு தீனியூட்டும் பண்டிக்கைக்கு இவ்வாண்டும் பல ரக உணவுகளுடன் மக்கள் கூட ஆரம்பித்துள்ளனர். குரங்குகளுக்கு உணவளித்து மகிழ்வித்தால் தமக்கு அதிஷ்டம் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இதற்கு விஞ்ஞான ரீதியா எந்த விளக்கங்களும் இல்லை..!

குரங்குகளுக்கு உணவளிக்கும் நிகழ்வின் காணொளி இங்கு.

நன்றி bbc.com

பதிந்தது <-குருவிகள்-> at 9:03 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

அட யானையும் மியுசிக் பிளே பண்ணுதுங்கோ.

குரங்குக்கு சாப்பாடு வைச்சா அதிஸ்டமா. நம்மூரில வேற மாதிரிச் சொல்வாங்களே.

Mon Nov 26, 04:17:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க