Thursday, November 01, 2007

Rainbow அல்ல இது Brainbow



பிரைன்போ (Brainbow)

உலகப் பிரசித்தி பெற்ற கவாட் பல்கலைக்கழகம் வெவ்வேறு நிறங்களில் புளளொளிரக்(fluorescent) கூடிய புரத மூலக்கூறுகளைக் கொண்டு (மரபணு மூலக்கூற்றுக் கலப்பு தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டவை) எலிகளின் மூளையில் உள்ள நரம்புக்கலங்களான நியூரோன்களை சுமார் 90 வேறுபட்ட நிறங்களினூடு நிறமூட்டி.. மூளை நரம்புக்கலங்கள் என்னென்ன வகையில் மூளையில் வலைப்படுத்தப்பட்டுள்ளன என்ற இரகசியத்தை கண்டறிந்துள்ளனர். வானவில்லில் (Rainbow) ஏழு நிறங்கள் தான் உண்டு. ஆனால் Brainbow இல் 90 நிறங்கள் உண்டு.

இதன் மூலம் எவ்வெவ்வகை நரம்புக்கலங்கள் எங்கெங்கு மூளையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்பதை அறிவதுடன் மூளையில் ஏற்படும் குறைபாடுகளுடன் எக்கெக்கலங்கள் தொடர்புபட்டுள்ளன என்ற உண்மையையும் அறியக் கூடியதாக இருக்கும். இந்த Brainbow நிறமூட்டல் விஞ்ஞானிகளுக்கு மூளை தொடர்பான அவர்களின் ஆராய்ச்சிக்கு நல்ல வரப்பிரசாதகமாக அமைந்துள்ளது.

மேலதிக தகவல் இங்கு.

Brainbow தொடர்பான காணொளி இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 3:03 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க