Tuesday, December 04, 2007

மதியால் மனிதரை வென்ற வாலில்லாக் குரங்குகள்.



கணணித்திரையில் தோன்றி மறையும் உருவங்களை ஞாபகப்படுத்தி மீண்டும் அதே உருவங்கள் கணணித்திரையில் தோன்றும் போது முன்னர் அவை எங்கெங்கு தோன்றின என்பதை சரிவர இனங்காட்டும் ஒரு பரிசோதனையில், பல்கலைக்கழக மாணவர்களை வெறும் 5 வயதேயான சிம்பென்சி (பழைய உலகுக் குரங்கு - மனிதக் குரங்கு) வெற்றி கொண்டுள்ளது.

குட்டிக் குரங்குகளின் பெற்றோரையும், மனிதரையும் விட சிம்பன்சிக் குட்டிகளே அதிக ஞாபக சக்தி கொண்டு இந்தப் போட்டியில் செயற்பட்டு வெற்றி பெற்றுள்ளன என்பதை ஜப்பானில் இப்பரிசோதனையை நடத்திய ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல் தெரியப்படுத்தியுள்ளது.

வழமையாக மனிதனே அனைத்திலும் சிறப்பு வாய்ந்தவன் என்ற சிந்தனையை இந்தப் பரிசோதனை மாற்றி அமைத்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாய்வு தொடர்பான காணொளி இங்கு.

மேலதிக தகவல் இங்கு

------

Chimpanzees are the real kings of the jungle when it comes to memory, scientists have discovered.

Young primates even beat university students in tests which revealed they have an 'extraordinary' photographic memory.

Juvenile chimps and their mothers were pitted against a group of undergraduates in a series of memory experiments.

source: metro.co.uk

பதிந்தது <-குருவிகள்-> at 3:33 pm

3 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

அப்ப மந்தி மனிசாள முந்திடும் போல இருக்கிறதே.

Tue Dec 04, 04:44:00 pm GMT  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) விளம்பியவை...

இந்த விவரணச்சித்திரம் தொ.கா வில் பார்த்தேன். ஆனாலும் என்ன?? புத்திக் கூர்மையிருந்தும், இந்த மனிதனின் கூட்டில் கிடந்து மாயுதே!?
ஏன் எனச் சிந்திப்பேன்.

Tue Dec 04, 11:00:00 pm GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

மனிதன் மனிதனையே கூண்டுக்க அடைச்சு வைச்சு சீரழிக்கிறான்.. குரங்கை விடுவானா.. யோகன்.

Tue Dec 04, 11:32:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க