Wednesday, December 05, 2007

விவாக ரத்துக்களை இயற்கை அன்னை வெறுக்கிறாள்.



ஒற்றுமையான குடும்பங்களை விரும்பும் இயற்கை.

இப்போ எல்லாம் மனிதத் தம்பதியரிடையே புரிந்துணர்வுக்கான வாய்ப்பு எழ முதல் விவாகரத்துக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு விடுகிறது. இதனால் உலகில் திருமணமான அல்லது கூடிவாழும் தம்பதியர் பிரிவதும் அதிகரித்து வருகிறது. அப்படிப் பிரிவோர் தனித்து வாழ்வதும் அல்லது இன்னோர் துணையைத் தேடுவதும் என்று பல வடிவங்களில் அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்க அல்லது விரிவுபடுத்த முனைகின்றனர்.

அது அவர்களின் சுதந்திரம் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அவர்களின் இந்தச் செயற்பாடு இயற்கை அன்னைக்குப் பாதகமாக அமைகிறதாம். உலகில் திருமணம் செய்து ஒற்றுமையாக வாழும் குடும்பத்தினர் இயற்கைக்கு அதிகம் பாதகமில்லாத வகையில் வளங்களைச் செலவழிப்பதுடன் அவர்கள் வெளியிடும் இயற்கைக்கு ஆபத்துமிக்க கழிவுகளின் அளவும் கட்டுபட்ட அளவில் அமைந்திருக்கிறதாம். ஆனால் விவாகரத்துப் பெற்றுப் பிரிவோர் தனிக் குடித்தனம் கும்மாளம் என்று வாழ்க்கையை வேறு பல தளங்களுக்குள் நகர்த்திச் செல்ல விரும்புவதாலும் உதாசீனமாக வாழ விளைவதாலும் அக்கறையற்ற பிடிப்பற்ற வாழ்க்கை வாழ்வதாலும்.. அவர்களின் வளப்பயன்பாடும் இயற்கையை நாசம் செய்வதில் உள்ள பங்களிப்பும் அதிகரித்துச் செல்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்து விவாகரத்துக்களால் இயற்கை அன்னைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பரிந்துரைத்துள்ளனர்..!

இதனால்தான் ஆதிகாலத்தில் கூட்டுக்குடும்பம் என்பதை வலியுறுத்தினரோ. இப்போ எல்லாம் தனிமனித சுதந்திரம் அளவுக்கு அதிகமாகி மனிதர்களும் சீரிய சிந்தனைக்கு இடமளிக்காமல் தான்தோன்றித்தனமாக வாழ விளைகின்றனர். அதுவும் இயற்கைக்கு ஒரு சீரழிவுதான்..!

மேலதிக தகவல் இங்கு.

--------------

Mother Nature feels the pains of divorce

WASHINGTON - Divorce can be bad for the environment. In countries around the world divorce rates have been rising, and each time a family dissolves the result is two new households.

"A married household actually uses resources more efficiently than a divorced household," said Jianguo Liu, an ecologist at Michigan State University whose analysis of the environmental impact of divorce appears in this week's online edition of Proceedings of the National Academy of Sciences.

More households means more use of land, water and energy, three critical resources, Liu explained in a telephone interview.

Households with fewer people are simply not as efficient as those with more people sharing, he explained. A household uses the same amount of heat or air conditioning whether there are two or four people living there. A refrigerator used the same power whether there is one person home or several. Two people living apart run two dishwashers, instead of just one.

Source: On the Net: Yahoo.com PNAS: http://www.pnas.org

பதிந்தது <-குருவிகள்-> at 7:24 am

1 மறுமொழிகள்:

Blogger வெங்கட்ராமன் விளம்பியவை...


தனிமனித சுதந்திரம் அளவுக்கு அதிகமாகி மனிதர்களும் சீரிய சிந்தனைக்கு இடமளிக்காமல் தான்தோன்றித்தனமாக வாழ விளைகின்றனர். அதுவும் இயற்கைக்கு ஒரு சீரழிவுதான்..!


உண்மைதான்.

இந்த விஷயத்தில் இருக்கும் உண்மை நன்றாகவே விளங்குகிறது.

Wed Dec 05, 08:06:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க