Sunday, December 09, 2007

ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் இந்தியாவும் இணைகிறது.



விண்ணில் பாயும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை - இஸ்ரேல்.

பேரழிவு ஆயுதங்கள் பூமிப்பந்தெங்கும் பெருகிக் கிடக்கின்ற ஆபத்து ஒருபுறமிருக்க... உலகின் இராணுவச் சமநிலையையும் நாடுகளிடையே போர் ஏற்பட்டு பேரழிவுகள் உண்டாவதையும் தடுப்பதில் ஆயுதப் போட்டா போட்டி ஒரு வகையில் உதவுகின்றது என்றால் மிகையல்ல.

ஆயுதப் போட்டா போட்டியில் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அணு ஆயுதம் உட்பட்ட பேரழிவு ஆயுத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் பெருக்கமும் முக்கிய பங்கு வகித்தன. இப்போதும் வகிக்கின்றன.

ஆனால் அண்மைய ஆண்டுகளில் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள், ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் என்பதன் கீழ் தமது தேசத்தின் மீதும் தமது நட்பு நாடுகள் மீதும் உள்ள அந்நிய நாடுகளின் ஏவுகணைகளின் தாக்குதல் அச்சுறுத்தல்களைத் தடுத்து உலகின் இராணுவச் சமநிலையை மேலும் மேலும் தமக்குச் சாதகமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மிக அண்மையில்,ரஷ்சியா வெளிப்படையாகவே அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டம் ஐரோப்பாவில் ரஷ்சியாவை இலக்கு வைத்து செயற்படுவதை காரசாரமாகக் கண்டித்திருந்தது.



இஸ்ரேலின் பலஸ்ரிக் ஏவுகணைகளை எதிர்க்கும் ஏவுகணைத் தொழில்நுட்பம்.

07-12-2007 அன்று, இந்தியா தனது ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஓரம்சமாக இஸ்ரேலின் உதவியுடன் தயாரித்த எதிரியின் ஏவுகணைகளை விண்ணில் வைத்தே தாக்கி அழிக்கவல்ல ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது.ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஏவுதளத்தில் இருந்து செய்யப்பட்ட இப்பரிசோதனையில் குறித்த ஏவுகணை அதன் இலக்கை வளிமண்டலத்தில் 15 கிலோமீற்றர்கள் உயரத்தில் வைத்து தாக்கி அழித்தது. இது இவ்வகை ஏவுகணைகளின் பரிசோதனையில் இரண்டாவது ஆகும்.

இப்பரிசோதனைகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ சமநிலையில் இந்தியாவின் மேலாண்மைக்கு வழி செய்ய முற்படினும் போட்டி நாடுகளும் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திலும் போட்டா போட்டியிட இடமளிப்பதோடு ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டங்களை முறியடித்துத் தாக்கவல்ல ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் தேவையையும் விரிவாக்கத்தையும் உலகில் ஏற்படுத்தி நிற்கும் என்பது யதார்த்தமாகி வருகிறது.

இதன் மூலம் உலக மக்கள், பயங்கர ஆயுத அச்சுறுத்தல்கள் மத்தியில் ஆயுதங்களால் எல்லையிடப்பட்ட அகண்ட பூமியில் தொடர்ந்தும் சிறைவைப்பட்டு, ஜனநாயகம் என்று உச்சரிக்கப்படும் உலக வல்லாதிக்க இராணுவ விரிவாக்கத்தின் மக்கள் ஆக்கிரமிப்புக் கொள்கையின் கீழ் போலியாக காட்டப்படும் அல்லது வழங்கப்படும் சுதந்திரத்தினை அனுபவித்தபடி... பேரழிவுக்கான சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியபடி உலக அரசுகளால் அடக்கி அச்சுறுத்தி ஆளப்படவே வகை செய்யப்படுகின்றனர்...!

----------

Orissa 7th Dec 2007 : India successfully carried out the second launch of a single stage nterceptor missile against an incoming ballistic missile at the Wheeler Island near Bay of Bengal, close to the Dhamra coast in eastern Orissa on Thursday December 6. The officials said that The endo-atmospheric interceptor collided with its target at an altitude of 15 Km, exactly as designed.

மேலதிக தகவல் இங்கு - காணொளி.

பதிந்தது <-குருவிகள்-> at 6:02 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

எனி, பாகிஸ்தானும் சீனாவும் சும்மா இருக்குமே என்ன?

Sat Dec 29, 11:49:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க