Friday, December 14, 2007

அந்தாட்டிக்கா நோக்கி விரியும் மனிதனின் அச்சுறுத்தல்கள்.



அந்தாட்டிக்கா எனும் பனி படர்ந்த கண்டம்.

பெருமளவில் மனிதனின் நேரடி அச்சுறுத்தல் மற்றும் குழப்பங்கள் இன்றி இருக்கும் பனி படர்ந்த அந்தாட்டிக்கா எனப்படும் பூமியின் தென்முனைப் பகுதி மனிதர்களின் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் நேரடி அச்சுறுத்தல்களுக்கும் பாதிப்புக்களுக்கும் மற்றும் குழப்பங்களுக்கும் உள்ளாகக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

அண்மையில் அவுஸ்திரேலியர்கள் அந்தாட்டிக்காப் பனிப் பாறைகள் மீது விமான ஓடுதளம் அமைத்து போக்குவரத்து விமானம் ஒன்றை வெற்றிகரமாக தரை இறக்கியது சாதனை எனினும் இதன் பின்னால் வேதனைகள் தொடரலாம் என்ற அச்சமும் ஏற்படுகிறது.

இன்று ஆய்வுகளுக்காக திறக்கப்படும் அந்தாட்டிக்கான போக்குவரத்துக்குப் பாதைகள்.. நாளை உல்லாசப் பயணத்துறைக்கும் வளங்களைத் தேடல் செய்யவும் என்று திறந்து விடப்படும் போது சூழல் மாசடைதல் அங்கும் விரிவடைய வாய்ப்பு ஏற்படும். ஏலவே மறைமுகமாக சூழல் மாசடைதல் விளைவுகளைச் சந்தித்து வரும் அந்தாட்டிக்கா எனி நேரடிப் பாதிப்புக்களையும் உள்வாங்க நேரிடலாம்.

பூமிவெப்பமுறுதல் விளைவால் அந்தாட்டிக்காப் பனிப்பாறைகளும் பெருமளவில் உருகி வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.அந்தாட்டிக்காப் பனிப்பாறைகள் உலகின் 70% நன்னீர் இருப்பைக் கொண்டுள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் சூழல் வெப்பப அதிகரிப்பால் பனிப்பாறைகள் உருகி அழியும் போது அந்தாட்டிக்காவில் புதைந்துள்ள வளங்களைத் தேட மனிதன் இன்றே அடித்தளம் இட்டுவிட்டான் போல் உள்ளது அவனின் செயற்பாடுகள்.

எதுஎப்படியோ மனிதனின் பல செயற்பாடுகள் எதிர்காலத்தில் பூமியில் அவனின் இருப்பையே சந்தேகத்துக்கு இடமாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தாட்டிக்காவில் விமானம் தரையிறங்கும் காணொளி இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 10:29 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க