Tuesday, December 18, 2007

உலகில் கடல் மட்டம் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைந்து அதிகரிக்கும்.



பூமிப் பந்தின் மேற்பரப்பில் சுமார் 75% சமுத்திரத்தால் நிறைந்திருக்கிறது. இந்தப் பூமியில் சுமார் 0.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் மனிதனின் சூழல் மீதான செல்வாக்கு மிகுதியால் சமீப நூற்றாண்டுகளில் பல சூழல் மாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் காபனீரொசைட்டின் அளவு அதிகரிப்பது உட்பட பல பாதகமான விளைவுகள் ஏற்பட ஆரம்பித்தன. இதனால் பூமி வெப்பமுறுதல் என்ற மிகப் பாதகமான; பூமிப்பந்தில் ஒப்பீட்டளவில் விரைந்து மாற்றங்களை ஏற்படுத்தவல்ல நிகழ்வு அரங்கேற ஆரம்பித்தது.

பூமி வெப்பமுறுதலின் நேரடி விளைவால் ( பல பாதகமான மறைமுக விளைவுகளும் ஏற்பட்டுள்ளன) துருவங்கள் மற்றும் உயரமான மலை உச்சிகளில் படிந்திருக்கும் பனிப்பாறைகள் உருக ஆரம்பித்தன. கடலில் உள்ள நீர் உலகின் சராசரி வெப்பநிலை உயர்வின் விளைவால் விரிவடைய ஆரம்பித்தது. இதனால் உலகக் கடல்மட்டம் சிறிது சிறிதாக அதிகரித்து வந்தது. தற்போதும் உலக வெப்பமுறுதல் விளைவு தொடர்ந்து வருவதால் முன்னர் எதிர்வு கூறப்பட்டதை (81 சென்ரி மீற்றர்கள்) விட இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் இரண்டு மடங்கால் (163 சென்ரி மீற்றர்கள்) அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல தாழ்நிலப் பிரதேசங்கள் கடலால் விழுங்கப்படப் போகின்றன..! பூமிப்பந்தில் இந்த மாற்றம்(மனிதனின் சூழல் மீதான செல்வாக்குக்கு அப்பால்) இயற்கையாக நிகழ வேண்டின் பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்திருக்கும் ஆனால் மனிதனின் சூழல் மீதான செல்வாக்கும் அவன் வெளியிடும் சூழலில் விரைந்து மாற்றங்களைத் தரவல்ல சூழல் பாதகக் காரணிகளின் அளவும் அதிகரித்து வருவதே பூமிப்பந்தில் இந்த மாற்றங்களை விரைவுபடுத்த வழி செய்துள்ளது என்பதுடன் மனிதன் உட்பட்ட உயிரினப் பேரழிவுக்கும் வித்திட்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Rising seas 'to beat predictions'

The world's sea levels could rise twice as high this century as UN climate scientists have previously predicted, according to a study.

The Intergovernmental Panel on Climate Change proposes a maximum sea level rise of 81cm (32in) this century.

But in the journal Nature Geoscience, researchers say the true maximum could be about twice that: 163cm (64in).

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 5:22 am

3 மறுமொழிகள்:

Blogger ரசிகன் விளம்பியவை...

// பூமிப்பந்தில் இந்த மாற்றம்(மனிதனின் சூழல் மீதான செல்வாக்குக்கு அப்பால்) இயற்கையாக நிகழ வேண்டின் பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்திருக்கும் ஆனால் மனிதனின் சூழல் மீதான செல்வாக்கும் அவன் வெளியிடும் சூழலில் விரைந்து மாற்றங்களைத் தரவல்ல சூழல் பாதகக் காரணிகளின் அளவும் அதிகரித்து வருவதே பூமிப்பந்தில் இந்த மாற்றங்களை விரைவுபடுத்த வழி செய்துள்ளது//

உண்மைதான் நண்பரே.. சூழல் சீர் கேட்டிற்க்கு மனித இனம் முக்கிய காரணியாக உள்ளது தான்..
அருமையாக சொல்லி இருக்கிங்க..

Mon Dec 24, 10:50:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கும் எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில் மக்களிடம் இது தொடர்பான அக்கறை குறைவாகவே உள்ளது வருத்தமளிப்பதாகவே இருக்கிறது..!

Tue Dec 25, 02:32:00 pm GMT  
Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

இந்த கார்பன்=டை-ஆக்ஸைட் தான் காரணம் என்பதும் இப்போது கேள்விகுரியதாகி இருக்கிறது.

Fri Dec 28, 04:38:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க