Sunday, December 30, 2007

மனிதப் பரம்பரையலகுப் பட்டியல் (Human Genome) - காணொளி



Human genome என்பது ஒவ்வொரு தனி மனிதனிலும் உள்ள 23 சோடி நிற மூர்த்தங்களில் காணப்படும் பரம்பரை அலகுகளின் பட்டியல் என்பதாகும். மனிதனில் கிட்டத்தட்ட 30,000 பரம்பரை அலகுகள் இனங்காணப்பட்டுள்ளன.

முன்னர் எதிர்வு கூறப்பட்டதை விட தனி மனிதர்களிடையே உள்ள பரம்பரை அலகு வேறுபாடென்பது அதிகம் என்று மனிதப் பரம்பரை அலகுப்பட்டியலை இவ்வாண்டில் (2007) இறுதி வடிவிட்ட போது தெரியவந்துள்ளது.

மனித பரம்பரை அலகுப் பட்டியல் 2003 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. 1990 இல் இதற்கான ஆய்வுகளை ஆரம்பிக்க அடித்தளமிடப்பட்டது.

மனிதனின் அறிவியல் உலகில் 2007 ஆண்டும் ஒரு படிக்கல்லாக அமைகிறது. காரணம் இந்த ஆண்டிலேயே மனித பரம்பரை அலகுப்பட்டியல் (Human genome) விஞ்ஞானிகளால் பல வழிகளிலும் முழுமை பெறச் செய்யப்பட்டுள்ளது..!

இது மருத்துவத்துறைக்கும் மனிதன் பற்றிய அறிவியல் ஆய்வுக்கும் முக்கியமாய் அமையிலும் தனிமனித ரகசியங்களைப் பேணுவதில் சிக்கற்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

மனித பரம்பரை அலகுப்பட்டியல் தயாரிப்புத் தொடர்பான காணொளி இங்கு.

மனித பரம்பரை அலகுப்பட்டியல் தொடர்பான மேலதிக செய்திகள் இங்கும் உண்டு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 7:00 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க