Monday, December 31, 2007

மரண அறிவித்தல் - ஒரங்குட்டான், மியாமி.



தற்கால உலகில் வாழ்ந்த உலகிலேயே வயது முதிர்ந்த ஒரங்குட்டானாக இனங்காணப்பட்ட ஒரங்குட்டான்.

இன்றைய உலகில் வாழும் குரங்குகளில் ஒரங்குட்டான் (orang-utan) என்ற வகை பழைய உலகுக் குரங்குகளும் அடங்குகின்றன. மனிதக் குரங்குகள் வகைக்குள் அடங்கும் இவை சுமாத்திராப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

இவ்வகை ஒரங்குட்டானில் அமெரிக்க மியாமி மிருகக் காட்சிச்சாலையில் வாழ்ந்து வந்த ஒரங்குட்டான் மூளைப் புற்றுநோய் காரணமாக தனது 55வது வயதில் மரணமடைந்துள்ளது. பெண் ஒரங்குட்டானான இதற்கு Nonja என்று பெயரிடப்பட்டிருந்தது. இது 5 குட்டிகளுக்குத் தாயும் ஆகும்.

உலகிலே வயது முதிர்ந்த ஒரங்குட்டான் இது என்று அமெரிக்க மியாமி மிருகக் காட்சிச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தக் குரங்கு கொலண்ட் வழியாக அமெரிக்காவுக்கு கொண்டு வரப்பட்டதாகும்.

சுமாத்திரா தீவில் இவ்வகை குரங்குகளின் எண்ணிக்கை தொடர்சியாக குறைந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதனின் இயற்கைச் சூழல் மீதான ஆதிக்கமும் இக்குறைவுக்குக் காரணமாகும்..!

மேலதிக தகவல் இங்கு.

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 10:53 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க