Friday, December 07, 2007

காச நோய் ( TB ) 5,00,000 வருடங்கள் பழமையானது.



ஆதியான காசநோய்க்குரிய ஆதாரம் காணப்பட்ட மனிதச் சுவடு.

தற்கால மனிதனின் முதன்மை மூதாதையர் சுமார் 5,00,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தனர் என்பது ஆய்வாளர்களின் கணிப்பீடு. அண்மையில் துருக்கியில் கண்டெடுக்கப்பட்ட 5,00,000 ஆண்டுகள் பழைமையான Homo erectus இல் அடங்கும் இளம் மனிதச் சுவடு ஒன்றில் காசநோய்க்கான (TB) நுண்கிருமிகள் வாழ்ந்ததற்கான அறிகுறியை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆபிரிக்காவில் இருந்து பூமியின் வடக்கு நோக்கி குடிபெயர்ந்த மனிதரிலேயே இந்தத் தொற்று அவதானிக்கப்பட்டுள்ளது. கறுப்புத் தோலுக்குரிய நிறமணிகள் சூரிய கதிர்ப்பில் இருந்து பாதுகாப்பை மட்டும் வழங்குவதில்லை. அவை சூரியக் கதிர்ப்பில் இருந்து தொகுக்கப்படும் விற்றமின் டியின் (Vit - D)அளவிலும் பங்களிப்புச் செய்கின்றன. மனிதன் சரியான அளவில் சூரியக் கதிர்ப்பில் இருந்து விற்றமின் டி யை தொகுக்காத போது (கறுப்பு தோலுக்குரிய மலனின் நிறமணிகள் சூரியக் கதிர்ப்பில் இருந்து தோலை பாதுகாக்க தோலுள் ஊடுருவும் கதிர்ப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதால் விற்றமின் டி தொகுப்பை குறைவடையச் செய்கின்றன)உடலில் உள்ள இயற்கைப் பாதுகாப்பான நிர்பீடணச் செயற்பாடு பலவீனமடைகிறது. இதுவே கறுப்புத் தோல் ஆதிமனிதனில் காசநோய்க்கான தொற்றை அதிகரித்துள்ளதாம்.

ஆதிகால மனிதனில் அதிக மரணத்தை ஏற்படுத்திய TB தற்போதும் உலகில் ஆபத்தான அளவில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சரியான மருத்துவச் சிகிச்சைகள் பெறப்படும் போது இந்நோயால் ஏற்படும் மரணத்தை 100% தடுக்க முடியும்..!

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 6:39 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க